கோவையைச் சேர்ந்தவர் தர்ஷா குப்தா. நன்கு தமிழ் பேசத் தெரிந்த பெண்ணான இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் முதலில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நடித்து வந்த தர்ஷா குப்தா பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாகத்தான். இதையடுத்து சினிமா வாய்ப்புகளைப் பிடிப்பதற்காக கிளாமர் ரூட் பிடித்த தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இதுவரை ருத்ர தாண்டவம், மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய இரண்டு திரைப்படங்கள் தர்ஷா நடிப்பில் வெளிவந்துள்ளன.
இதில் கடைசியாக வெளிவந்த ஓ மை கோஸ்ட் படத்தில் தான் சன்னிலியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியில் தாராளம் காட்டி இருந்தார் தர்ஷா குப்தா.

அடுத்தபடியாக அவர் நடிப்பில் மெடிக்கல் மிராக்கிள் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்து வருகிறார்.
தொடர்ச்சியாக சினிமாவில் நடிக்க வாய்ப்புகிடைத்துவந்தாலும்,கவர்ச்சி போட்டோஷூட் நடத்துவதை தொடர்ந்து செய்து வருகிறார் தர்ஷா குப்தா.

தற்போது கடற்கரையோரம் மணலில் அமர்ந்தபடி டீப் கவர்ச்சி காட்டி போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார் தர்ஷா குப்தா.

கவர்ச்சி புயலாக மாறி தர்ஷா குப்தா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் பார்த்து சமூக வலைதளவாசிகள் அவரை வர்ணித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு தர்ஷா குப்தா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட்தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இராமானுஜம்
