நவீன வாழ்க்கைச் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தாத நபர்களே இல்லை. குறிப்பாக, இளைஞர்கள் தங்களின் தூக்கத்தைத் தொலைத்து செல்போன்களுக்கு அடிமையாகியுள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சினையாக இருப்பது கருவளையம்.
“செல்போன் வெளிச்சம், தூக்கமின்மை மற்றும் முறையான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ளாதது ஆகியவை கருவளையம் உருவாக முக்கியக் காரணமாக உள்ளது. இவை தவிர, உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் கருவளையம் வர வாய்ப்புள்ளது. சைனஸ், டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களுக்குக் கருவளையம் உண்டாகலாம். சிலருக்கு மரபியல் காரணத்தாலும் கருவளையம் வரலாம். சிலருக்கு, முக அமைப்பில் கண்ணுக்கு மேல் உள்ள எலும்பு சற்று துறுத்திக்கொண்டிருக்கும் என்பதால் கண் உள்ளே சென்றதுபோல் இருக்கும்; அப்போது கண்ணுக்குக் கீழே விழும் நிழல் கருவளையம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்” என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
மேலும், கருவளையத்தைச் சரி செய்வது மற்றும் பராமரிப்பது குறித்த ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்… “நம் கண்களைச் சுற்றியிருக்கும் தோலின் தடிமன் மிக மிகக் குறைவு; 0.5 மில்லி மீட்டர் மட்டுமே. அதனால், மற்ற பகுதிகளைவிட அந்த சென்சிட்டிவ் சருமத்தை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். தினமும் மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தலாம். வயது ஏறும்போது சிலருக்குக் கருவளையம் விழ ஆரம்பிக்கும். அந்தச் சமயத்தில் ஆன்டி ஏஜிங் க்ரீம் பயன்படுத்தலாம். Dark circles under the eyes
டஸ்ட் அலர்ஜி, சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும். புகைப்பழக்கத்தால் பலருக்கும் கருவளையம் ஏற்படுகிறது என்பதால், புகைப்பழக்கதைக் கைவிட வேண்டும். முறையான தூக்கம், தேவையான அளவு அவசியம். தூக்கச் சுழற்சி மாறக்கூடாது. 6 – 8 மணி நேரம் நன்றாகத் தூங்கும்போது கண்களைச் சுற்றிய ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.கண்களைக் கசக்கித் தேய்க்கக்கூடாது. கண்களைச் சுற்றி இருக்கும் மிகச் சிறிய அளவிலான ரத்தக் குழாய்கள் இதனால் பாதிக்கப்பட்டு கருவளையம் உருவாகும்.
உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் உணவில் கீரை, பேரீச்சம் பழம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். தேவைப்படுபவர்கள் மருத்துவர் பரிந்துரையுடன் அயர்ன் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒரு ஐலைனர் / ஐ ஷேடோ புராடக்ட்டை ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அது பழையதாகி விடும் என்பதால் புதிதாக வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
இரவு தூங்கச் செல்லும் முன் முகத்தைக் கழுவிய பின், ஃபிரிட்ஜில் வைத்து எடுத்த டீ பேக்கை கண்கள்மீது சில நிமிடங்கள் வைத்து எடுத்துவிட்டுத் தூங்கலாம். உருளைக்கிழங்கை வெட்டி, கண்களின் மேல் சில நிமிடங்கள் வைக்கலாம். அதிக கருவளையத்தால் மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்களுக்கு க்ரீம், சன்ஸ்கிரீன், மாய்ஸ்ச்சரைசர், வைட்டமின் சி, வைட்டமின் கே உள்ள சீரம் ஆகியவை தேவையைப் பொறுத்து பரிந்துரைக்கப்படும்” என்கிறார்கள். Dark circles under the eyes
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பனிவரகு கஞ்சி வித் பப்பட்
ED வீசிய சம்மன் அஸ்திரம்… தடுத்து நிறுத்திய அரசு வாதம்! நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ரூ.400 கோடி முதலீட்டில் புதிய காலணி தொழிற்சாலை திறப்பு!
சட்டமும் மருத்துவமும் சந்திக்கும் புள்ளிதான் செந்தில்பாலாஜி கேஸ்: அப்டேட் குமாரு