நடிகர் தனுஷ் ஒரு நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஒரு சிறந்த கலைஞராக சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரது இயக்கத்தில் வெளியான “பா. பாண்டி” படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு “ராயன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
ராயன் படத்திற்காக தனுஷ் மொட்டை கெட்டப்பில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது உள்ளது.
இந்நிலையில் இன்று (மே 9) ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “அடங்காத அசுரன்” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
“அடங்காத அசுரன் தான்… வணங்காத மனுஷன் தான்..” என்று தொடங்கும் இந்த பாடலை தனுஷ் மற்றும் ஏ. ஆர். ரகுமான் இணைந்து பாடியுள்ளார்கள். இதற்கான பாடல் வரிகளை தனுஷ் எழுத, பிரபுதேவா இந்த பாடலுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இந்த பாடலின் மேக்கிங் காட்சிகளை பார்க்கும்போது படத்தில் இந்த பாடல் மிகப் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “மரியான்” படத்தில் இடம்பெற்ற “கடல் ராசா” பாடலுக்குப் பிறகு தனுஷ் பாடல்வரிகளை எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள பாடல் இந்த “அடங்காத அசுரன்” என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி ராயன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு தனுஷின் புதிய போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 ஆண்டுகள் விவேக்குடன் பேசாத சுந்தர்.சி – காரணம் தெரியுமா?
விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது!
ஆகஸ்ட் 15க்குள் 30 லட்சம் வேலைகள்… இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்த ராகுல்
தவறான முன்னுதாரணமாகிவிடும்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கூடாது: ED