தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள படம் கேப்டன் மில்லர்.
இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்திப் கிஷன், நடிகை நிவேதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் கேப்டன் மில்லர் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ரன் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. கேப்டன் மில்லர் படத்தின் மொத்த ரன் டைம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள்.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் அதிக வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்ததால் கிளைமாக்ஸ் காட்சியில் கிட்டத்தட்ட 4 நிமிடங்களை கட் செய்ய வேண்டும் என்று இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு கூறியதால் கேப்டன் மில்லர் பட குழுவினரும் கிளைமாக்ஸில் 4 நிமிட காட்சிகளை கட் செய்து விட்டார்களாம்.
கேப்டன் மில்லர் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தால் இந்த படத்தின் அடுத்த அடுத்த பாகங்கள் வெளியாகும் என்று இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியாவில் 7 கோடி வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்…என்ன காரணம்?
அட்லீயை நாம் கொண்டாட வேண்டும்: சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
எதிர்க்கட்சிகளுக்கு சர்க்கரை பொங்கல்: அப்டேட் குமாரு
எல்லாமே ரொம்ப மோசமா இருக்கு… வைரலாகும் தங்கலான் நடிகையின் பதிவு!