இந்தியாவைப் பொறுத்தவரை ஆரோக்கியம் தொடர்பான குடும்ப செலவில் 50 சதவிகிதத் தொகை, தேவையற்ற மருந்துகளுக்கும் பரிசோதனைகளுக்கும் செலவிடப்படுவதாகக் குறிப்பிடுகிறது ஒரு புள்ளிவிவரம். Dangers of Self-Medication
அதிலும் குறிப்பாக, மருத்துவரின் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் மருந்துக் கடைகளில் வாங்கப்படும் மருந்துகளின் எண்ணிக்கை அதிகம் என்கிறது.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். மருந்துகள் பரவலாகக் கிடைப்பதன் எதிரொலியாக இப்படி நடப்பதால், ஆன்டிபயாடிக் எதிர்ப்புத்தன்மை (Antibiotic Resistance) உள்ளிட்ட தேவையற்ற உடல்நலக் கோளாறுகளையும், அநாவசிய செலவுகளையும் நாமே தேடிக் கொள்கிறோம் என்கிறது சுகாதாரத்துறை.
உதாரணத்துக்கு, பாராசிட்டமால் மாத்திரை. பின் விளைவுகள் தெரியாமல் தலைவலி, உடல்வலி போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கு மீண்டும் மீண்டும் இதே மாத்திரையை வாங்கிப் பயன்படுத்துவார்கள். Dangers of Self-Medication
பாராசிட்டமால் பாதுகாப்பான மருந்துதான் என்ற நம்பிக்கையில், அதை அதிக அளவில் தவறாகப் பயன்படுத்தும்போது, அதன் பக்கவிளைவாக கல்லீரல் பழுது ஏற்படலாம்.
ஒவ்வொரு மருந்துக்கும் இதுதான் சரியான டோஸ் என ஒரு கணக்கு இருக்கிறது. அது தெரியாமல் தவறான டோஸில் எடுக்கும்போது பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால்தான் மருந்துக்கடைகளில் நீங்களாகவே மருந்துகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.