திரைப்படங்களில் பிராமணியப் பார்வையை மாற்றும் தென்னிந்திய இயக்குநர்கள்!

Published On:

| By Minnambalam Desk

Dalit representation in Tamil cinema

அனிஷா ரெட்டி Dalit representation in Tamil cinema

தென்னிந்திய சினிமாவில் தலித் பிரதிநிதித்துவம் தீவிரமான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது (2022) படத்தில் நீல நிற முடியும், வளையமும் அணிந்த தலித் பெண் ரெனீ, தனது கூட்டாளியான இனியனிடம் – இவர் ஆச்சாரமான பிராமணர் – “நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்களா?” என்று கேட்கிறார்.

ஆனால், காட்சியின் ஃபிரேம் அமைக்கப்பட்ட விதத்தைப் பார்த்தால் அந்தக் கேள்வி பார்வையாளர்களை நோக்கிக் கேட்கப்படுவதுபோல் தெரிகிறது. தென்னிந்தியப் படங்களில் திரைப்பட இயக்குநர்கள் பிராமணியப் பார்வைக்கும் கண்ணோட்டங்களுக்கும் சவால் விடும் தற்போதைய போக்கின் ஒரு பகுதிதான் இது.

தென்னிந்திய சினிமாவில் தலித் பிரதிநிதித்துவம் குறித்துத் தனது முனைவர் பட்டத்திற்காக ஆய்வுசெய்த அபேக்ஷா சிங்கேகோலின் கவனத்தை இந்தக் காட்சி ஈர்த்தது.

“கடந்த பத்தாண்டுகளில் தலித் சினிமாவின் புதிய அலை உருவாகியுள்ளது. இது ‘புதிய தலித்’ என்னும் அம்சத்தை நாம் உணர்ந்துகொள்ள உதவுகிறது. இந்த தலித் புதியவர் அல்ல; சினிமாவால் அங்கீகரிக்கப்படாத பழைய தலித்தான்” என்று பெங்களூருவில் உள்ள கிறைஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அபேக்ஷா சிங்கேகோல் கூறினார்.

ஜனவரி 25 அன்று பெங்களூருவில் உள்ள ‘அட்டா கலாட்டா’ என்னும் புத்தக விற்பனை மையத்தில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். தென்னிந்திய சினிமாவில், குறிப்பாக 1950களிலிருந்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள தலித் பிரதிநிதித்துவத்தை இவர் ஆய்வுசெய்திருக்கிறார்.

Dalit representation in Tamil cinema

பா. இரஞ்சித், மாரி செல்வராஜ், கோபி நயினார் போன்ற இயக்குநர்கள், திரைப்படக் கதைகளில் ஆதிக்கம் செலுத்தும் உயர் சாதியினரின் பார்வையைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். தலித்துகளைத் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது பலவீனமானவர்கள் என்ற வகைமாதிரிக் கருத்துக்களை நிராகரித்து, தலித்துகளுக்கான சரியான முகமையையும் கண்ணியத்தையும் திரையில் மீட்டெடுக்கிறார்கள். காலா (2018), தங்கலான் (2023) ஆகிய படங்கள் இதற்கான உதாரணங்கள். Dalit representation in Tamil cinema

பா. இரஞ்சித்தின் தங்கலான் கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்க வயல்களில் ஆங்கிலேயர்களுக்காகத் தங்கம் வெட்டியெடுக்கும்போது உயிரிழந்த தலித்துகளை மையமாகக் கொண்டது. நாம் அணியும் தங்கம் தலித்துகளின் இரத்தத்தால் கறைபட்டுள்ளது என்னும் செய்தியைப் படம் தெளிவாகச் சொல்வதாக அபேக்ஷா சிங்கேகோல் கருதுகிறார்.

Dalit representation in Tamil cinema

இந்தப் படம், ‘நட்சத்திரம் நகர்கிறது’வைப் போலவே, தலித் அடையாளத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார். உறுதியான அம்பேத்கரியவாதியான ரெனீ, தனது காதலன் இனியன் ஒரு வாக்குவாதத்தின்போது சாதிய அவதூறுகளை வீசியதும் அவனை விட்டுப் பிரிகிறாள். Dalit representation in Tamil cinema

“இன்றைய தலித்துகள் வெளிப்படையாகப் பேசுபவர்கள், படித்தவர்கள், அதிகாரம் பெற்றவர்கள், தங்கள் உரிமைகள் குறித்து அறிந்தவர்கள்” என்று அபேக்ஷா சிங்கேகோல் கூறினார். கன்னடரான அபேக்ஷா சிங்கேகோல் பார்த்த முதல் கன்னடப் படங்களில் ஒன்று வசந்தசேனா (1941) வசந்தசேனாவின் பிராமணியக் கதையாடல் பிற கன்னடத் திரைப்படங்களுக்கான வார்ப்புருவாக மாறியது என்கிறார் அபேக்ஷா. Dalit representation in Tamil cinema

Dalit representation in Tamil cinema

ராமய்யர் ஷிரூர் இயக்கிய இந்தப் படம், சாருதத்தாவைக் காதலிக்கும் ஒரு பணக்காரப் பாலியல் தொழிலாளியைப் பின்தொடர்கிறது. ஒரு பிராமணர் தனது செல்வத்தையெல்லாம் பொதுத் தொண்டுக்காக இழந்து மற்றவர்களுக்காகத் தியாகம் செய்கிறார். Dalit representation in Tamil cinema

“இந்தப் படத்தைப் பார்த்தபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். கன்னடப் படங்களில் பிராமணக் கண்ணோட்டங்கள் பெரிதும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. திரையில் சித்தரிக்கப்படும் வார்ப்புருக்கள் ஒரே மாதிரியாக இருந்தன. நாயகன் மீட்பராக, உன்னதமானவராக இருப்பார். அவர் எப்போதும் பிராமணர்தான்” என்றார் அபேக்ஷா. இத்தகைய சாதி அடையாளம் மறைமுகமாக இருந்தது. முக்கியக் கதாபாத்திரங்களின் பெயர்கள், தொழில்கள், ஆளுமைப் பண்புகள் ஆகியவற்றின் வடிவில் இது வெளிப்பட்டது.

வசந்தசேனாவில் சாருதத்தனின் வறுமைக்கு அவரது பொதுநல எண்ணம்தான் காரணம். அதேபோல், பி. துரைராஜும் எஸ்.கே. பகவானும் எடுத்த கஸ்தூரி நிவாசா (1971) படத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலை உரிமையாளர் ரவிவர்மா (ராஜ்குமார் நடித்தார்) தனது ஊழியர் சந்துருவுக்கு நிதி உதவி செய்கிறார். அவரை வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்காக அனுப்புகிறார். “சந்துரு பேசும் கன்னடம் பெரும்பாலான வொக்கலிகர்கள் வசிக்கும் ஹாசனில் பேசும் வட்டார வழக்கு. ரவி பெரிய மனம் கொண்டவர், தனக்குக் கீழ் இருந்த வொக்கலிகர் ஒருவருக்கு அவர் தனது சிரமங்களை மீறி உதவி செய்தார் என்பதைக் காட்ட இந்தப் படம் முயன்றது” என்று அபேக்ஷா சுட்டிக்காட்டினார்.

பாலியல் தொழில், தகாத உறவு, மண வாழ்வின் வரம்பை மீறிய பாலுறவு போன்ற விஷயங்களைக் கையாளும் படங்களிலும்கூடச் சாதியப் படிநிலைகள் இருந்தன. புட்டண்ணா கனகலின் கெஜ்ஜே பூஜே (1969) தென்னிந்தியாவில் தேவதாசி முறையைப் பற்றிப் பேசிய முதல் திரைப்படங்களில் ஒன்றாகும். “இந்தப் படத்தில்கூட, தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்ட பெண்ணை பிராமணராகச் சித்தரிக்கிறார்கள். இது தலித் பெண்களின் வாழ்க்கை யதார்த்தங்களைப் புறக்கணிக்கிறது” என்று அபேக்ஷா சுட்டிக்காட்டுகிறார்.

இந்தப் பார்வை மற்ற தென்னிந்திய மொழிப் படங்களிலும் காணப்பட்டது. தீண்டாமை, கோயில் நுழைவு இயக்கங்கள் ஆகியவை தென்னிந்தியப் படங்களில் அவ்வப்போது இடம்பெற்றாலும் ஆழமாகப் பேசப்படவில்லை.

1938ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு மொழித் திரைப்படமான ‘மலபில்லா’, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இந்தப் பிரச்சினைகளைக் கையாண்ட முதல் சமூக நாடகங்களில் ஒன்றாகும். ஒரு தலித் பெண்ணும் ஒரு பிராமண ஆணும் (தலைமைப் பூசாரியின் மகனும்) கிராமத்திலிருந்து ஓடிவிடுகிறார்கள்.

அதே பூசாரி தலைமையில் ஒரு குழு தலித்துகள் கோவிலுக்குள் நுழைய முயற்சிக்கும்போது இது வெளிப்படுகிறது. படம் நேர்மறையான குறிப்பில் முடிகிறது. போராட்டக்காரர்களான தலித்துகள் பூசாரியின் மனைவியை நெருப்பிலிருந்து காப்பாற்றுகிறார்கள். அவர் தனது மகனையும் அவரது மனைவியையும் ஏற்றுக்கொள்கிறார். இந்தப் படம் சாதியச் சித்தரிப்பில் ஏற்கெனவே நிலவிய போக்கையே பிரதிபலிக்கிறது என்கிறார் அபேக்ஷா.

Dalit representation in Tamil cinema
அபேக்ஷா சிங்கேகோல்

ஆந்திரப் பிரதேசத்தில் கரம்சேதுவிலும் சுந்துருவிலும் தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் அந்தக் காலத்தில் வெளியான திரைப்படங்களில் எந்தப் பிரதிநிதித்துவத்தையும் பெறவில்லை. 1985ஆம் ஆண்டில் கரம்சேதுவில் ஆதிக்கச் சாதியினரான கம்மாக்கள் கொடிய ஆயுதங்களுடன் ஆறு மடிகா (தாழ்த்தப்பட்ட வகுப்பினர்) ஆண்களைக் கொன்றது. குறைந்தது மூன்று பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தது. ஆகஸ்ட் 1991இல் சுந்துருவில் ஆதிக்கச் சாதி ஆண்களின் கும்பல் எட்டு தலித் ஆண்களைக் கொன்றது. Dalit representation in Tamil cinema

தமிழ்த் திரைப்படங்களின் பங்களிப்பு Dalit representation in Tamil cinema

சினிமாவில் தலித் பிரதிநிதித்துவத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மாநிலத்தில் கோலோச்சும் திராவிட இயக்கங்களின் காரணமாகத் தமிழ்த் திரைப்படங்கள் சாதி எதிர்ப்புக் கூறுகளைக் கொண்டிருகின்றன. இருப்பினும், புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இயக்குநர்களின் புதிய அலை ஒன்று உருவாகியுள்ளது. இது ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களுக்கு இடமளிக்கிறது.

திரைப்படங்களின் பிரதான கதாபாத்திரங்களுக்குத் தலித் பெயர்கள் வைக்கப்படுகின்றன. தலித் சமூகத்துடன் தொடர்புடைய இடங்களில் படமெடுக்கப்படுகின்றன. நடுத்தர வர்க்கப் பார்வையாளர்களையும் இவை கவருகின்றன. பா. இரஞ்சித் காலா திரைப்படம் மும்பையின் தாராவி பகுதியில் நில உரிமைகளுக்காகப் போராடுபவரை நாயகனாகக் கொண்டது. தமிழின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் நடித்த அந்தப் படத்தில் கதாநாயகன் ஒரு தலித். அவர் தனது மக்களைப் பாதுகாப்பவர். அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பவர். கபாலி (2016) படத்தில் வரும் நாயகனின் பெயர் கபாலி. இந்தப் பெயரைத் தலித் மீனவர்கள் பயன்படுத்திவருகிறார்கள். கபாலியின் தொடக்கக் காட்சியில் ரஜினிகாந்த் படிக்கும் ‘மை ஃபாதர் பாலய்யா’ புத்தகம்கூடச் சாதி பற்றிய சொல்லாடலில் முக்கியமானது. ஒய்.பி. சத்தியநாராயணாவின் இந்த நூல் தெலங்கானாவில் ஒரு தலித் எழுத்தாளரின் தன்வரலாற்று நூல்.

இரஞ்சித் ஒரு தலித். அவருடைய பெரும்பாலான படங்கள் தலித் சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளன. அதேபோல் மாரி செல்வராஜின் மாமன்னன் (2023) படத்திலும், தலித் ஹீரோ பணிவானவராகவோ அல்லது சக்தியற்றவராகவோ சித்தரிக்கப்படவில்லை. மாறாக சமூக மாற்றத்திற்காகப் போராடுபவராகச் சித்தரிக்கப்படுகிறார். இந்தப் படம் திராவிட அரசியலுக்குள் உள்ள சாதி அடிப்படையிலான பாகுபாட்டையும் பேசுகிறது.

Dalit representation in Tamil cinema

இந்தப் பிரதிநிதித்துவம் மனிதர்களோடு தொடர்புடையது மட்டுமல்ல. தலித்துகளுடன் அடையாளம் காணப்படும் பல்வேறு குறியீடுகள், விலங்குகள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றுடனும் தொடர்புகொண்டது. பன்றிகள், கழுதைகள் போன்ற விலங்குகள் அசுத்தமானவையாகக் கருதப்படுகின்றன, எனவே அவை தலித்துகளுடன் ஒப்பிடப்படுகின்றன.

ஆனால் தலித் இயக்குநர்கள் தங்கள் படங்களில் இந்த விலங்குகலைப் பெருமைக்குரிய சின்னங்களாகப் பயன்படுத்தியிருப்பதாக அபேக்ஷா குறிப்பிடுகிறார். மாமன்னன் படத்தின் கதாநாயகன் (உதயநிதி ஸ்டாலின்) பன்றிகளை வளர்க்கிறார். ஒரு காட்சியில் அவர் இறக்கைகள் கொண்ட ஒரு பன்றிக்குட்டியை வரைகிறார். இது பெரும்பாலும் அசுத்தத்துடன் தொடர்புடைய உயிரினம் சுதந்திரத்தின் அடையாளமாக மாறுவதைக் குறிக்கிறது. Dalit representation in Tamil cinema

“இவை கையில் பாப்கார்னுடன் இருக்கைகளில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்து ஆசுவாசமாகப் பார்க்க முடியாத வகையான திரைப்படங்கள்” என்று செல்வராஜ் கூறுவதாக அபேக்ஷா குறிப்பிடுகிறார். கதைசொல்லும் தன்மையில் ஏற்பட்ட இந்த மாற்றம் தென்னிந்திய சினிமாவில் தலித் பிரதிநிதித்துவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. நீண்ட காலமாக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த கதைகளை மீட்டெடுக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிய இடத்தைத் தருகிறது. Dalit representation in Tamil cinema

*

நன்றி: த பிரிண்ட் இணைய இதழ்

தமிழில்: தேவா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share