சித்தரத்தைத் தூளை தேனில் கலந்து நாள்தோறும் இருவேளை சாப்பிட்டு வர தொண்டை சார்ந்த நோய்கள், இருமல் போன்றவை விரைவில் குணமாகும்.
அதிமதுரத்தை அரைத்து உடலில் பூசி குளித்து வர சொறி, சிரங்கு குணமாகும்.
நந்தியாவட்டை இலைகளை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
பிரண்டை இலைகளுடன் உப்பு, புளி, பூண்டு, சின்னவெங்காயம் சேர்த்து துவையலாக சாப்பிட செரிமானக் கோளாறுகள் மறையும்.
கீழாநெல்லி இலையை உப்பு சேர்த்து அரைத்து பூசி, உடலில் ஊறவிட்டு பின் குளிக்க தோல் நோய்கள் குணமாகும்.
மகிழமரத்தின் பட்டையை பொடியாக்கி பல் துலக்கிட பல்வலி குணமாகும்.
சுரைக்காயை அடிக்கடி சாப்பிட தொப்பை குறையும்.
மாதுளம்பழம் சாப்பிட குடல்புழுக்கள் அழியும். வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
வில்வ மரத்தின் பூவுடன் புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட குடல் வலிமை பெறும்.
திராட்சைப் பழச்சாறு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது மோரில் கலந்து குடிக்க, வயிற்றுவலி தீரும்.
அவரை இலைச் சாற்றை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும்.
செம்பருத்திப் பூவை காயவைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு பாலில் கலந்து உண்டுவர மலச்சிக்கல் இருக்காது.
நெல்லிக்காயை இடித்துச் சாறு பிழிந்து அதனுடன் தேன் சேர்த்து அருந்த விக்கல் நிற்கும்.
முற்றிய மாவிலையை பொடியாக்கி தணலில் போட்டு, சுவாசித்தால் விக்கல் குணமாகும்.
தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.
புதினா இலையின் தேன் கலந்து குடிக்க மாதவிடாய் ஒழுங்காகும்.
தூதுவளை இலைகளை அரைத்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து கஷாயமாக பருக மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி குறையும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ராகி சீவல்
இதெல்லாம் நமக்குத் தேவையா கோபி? – அப்டேட் குமாரு
தீபாவளி… எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்? – வெளியான முக்கிய அறிவிப்பு!
அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கு விசிக எதிர்ப்பா?- எல்.முருகனுக்கு திருமா பதில்!