மேகதாது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதில்!

Published On:

| By Monisha

D.K.Shivakumar said appeal TN govt

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், தான் நடத்திய முதல் ஆலோசனைக் கூட்டத்தில், “நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மேகதாது மற்றும் மகதாயி அணை திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இதற்குத் தமிழ்நாட்டில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,

”சிவக்குமார் பதவிப் பிரமாணம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசி பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும்” என்று அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் சிவகுமாரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் இன்று (ஜூன் 1) டி.கே.சிவக்குமார் அவரது ட்விட்டர் பதிவில், “மேகதாது திட்டத்திற்கு முந்தைய அரசு அறிவித்த ரூ.1,000 கோடி பணம் திட்டத்தை செயல்படுத்த பயன்படுத்தப்படும். தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை. அவர்கள் நம் சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள்.

கர்நாடகாவில் வாழும் தமிழர்களும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை குடித்து வருகின்றனர். மேகதாது திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விவசாயிகளுக்கு பாசனமும், சாமானியர்களுக்கு குடிநீரும் கிடைக்கும்.

மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன். ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒன்றாக செயல்படுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. தமிழக ஆளுங்கட்சியான திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில் அரசியல் ரீதியாகவும் திமுகவுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

ஜூனியர் ஆசியக்கோப்பை: பைனலில் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா

சீமானின் புதிய ட்விட்டர் பக்கம்: முதல் பதிவிலேயே முதல்வருக்கு நன்றி!

ஹலோ மிஸ்டர் மோடி : அமெரிக்காவில் ராகுல் கிண்டல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share