மதுரையைக் குறிவைக்கும் ‘விஸ்வாசம்’!

Published On:

| By Balaji

அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் விஸ்வாசம் படத்தின் புரொமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன.

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அடிச்சுதூக்கு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் ‘வேட்டி கட்டு’ என்ற இரண்டாவது பாடலைப் படக்குழு நேற்று இரவு வெளியிட்டது. தூக்குதுரை என்ற கதாபாத்தித்தில் அஜித் இரு வித தோற்றங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா நிரஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். அடிச்சு தூக்கு பாடல் சற்று வயதான தோற்றத்தில் அஜித் ஆடும்படியாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த கதாபாத்திரம் குறித்த அறிமுகப் பாடலாகவும் இருந்தது. தற்போது வெளியாகியுள்ள வேட்டி கட்டு பாடலில் அஜித் இளமைத் தோற்றத்தில் வருகிறார்.

ADVERTISEMENT

*“வேட்டி கட்டு வேட்டி கட்டு *

*சேர சோழப் பாண்டிக்கெல்லாம் சேர்த்து கட்டு*

ADVERTISEMENT

*அடாவடி தூக்குதுரை அலப்பறையான துரை*

*தடாலடி சோக்குதுரை குணத்துல ஏது குறை?*

ADVERTISEMENT

*சண்டைக்கும் பந்திக்கும் முந்துவோம்*

*சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்*

*மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்*

*அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்*

*துரை எழுந்து வந்தா பறையடி எகிறிவந்தா அடிதடி”*

மதுரையைக் களமாகக் கொண்டு படம் உருவாகியிருப்பதால் இந்தப் பாடல் அஜித்தின் கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறினாலும் மதுரை மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கவேண்டும் என்ற தெளிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. யுகபாரதி இதன் வரிகளை எழுதியுள்ளார். ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபு, விவேக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

[‘வேட்டி கட்டு’](https://www.youtube.com/watch?v=MK25F3PgPEg)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share