காஞ்சிபுரத்தில் அத்திவரதரைத் தரிசனம் செய்ய வந்த நான்கு பேர் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
40 வருடங்களுக்கு ஒருமுறை 48 நாட்கள் காட்சியருளும் ஶ்ரீஆதி அத்திவரதர் வைபவ தரிசனத்துக்காக காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 15லட்சத்திற்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த வைபவத்தின் 18ஆவது நாளான இன்று அத்திவரதர் கத்தரிப்பூ நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.
லட்சக்கணக்கான மக்கள் காஞ்சியில் குவியும் நிலையில் இன்று (ஜூலை 18) அத்திவரதரை காண வந்த 100க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்த காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையன், கோயில் சுற்று வட்டார பகுதிகளில் 14 மருத்துவக் குழு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 ஆம் தேதி முதல் தற்போது வரை 100க்கும் மேற்பட்டோருக்கு ஓ.ஆர்.எஸ். எலக்ட்ரால் கரைசல் வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மாறுபட்டு 100 பேர் மயங்கி விழுந்தனர் என்று தவறாக பரவியுள்ளது என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில் அத்திவரதரை காண வந்த நான்கு பேர் இன்று கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி மயங்கி விழுந்த இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள், ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த நாராயணி, சென்னை ஆவடியைச் சேர்ந்த ராதாமணி, நடராஜன், சேலத்தை சேர்ந்த ஆனந்த ராஜன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நால்வரும் இலவச தரிசனத்திற்கான வரிசையில் காத்திருந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அத்திவரதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் பலர், கூட்ட நெரிசலால் உள்ளே செல்ல முடியாமல் திரும்பும் நிலையில், இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
,”





