சீமானை வாண்டடா வண்டியில ஏத்திவுட்ட புன்ணியவான் யாருன்னு தெரியலை.
‘சீமான்’ன்னு ட்விட்டரில் எழுதினாலே அதை ஆட்டோமேட்டிக்கா ரீடிவிட்
ஆகிறமாதிரி பாட் அக்கௌன்ட் ஆரம்பிசிருக்காங்க. நேத்து மதியம் ஒரு
ட்விட்டர் இதை கண்டு புடிச்சு அம்பலப்படுத்த, அப்ப இருந்து இதோ இப்ப
வரைக்கு பொழுது போகலைன்னா சீமானை திட்டி ஒரு ட்விட் போட்டு அந்த பாட்
அக்கௌன்ட் கூட விளையாண்டுகிட்டு இருக்காங்க.எலக்சன் வருது இல்லையா சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேசன் லிஸ்டில் தன்னோட பெயரும் வருவதற்காக அவரே இப்படி பண்ணியிருக்காருனும், இல்ல இது யாரோ சீமானின் அமெரிக்க அடிமை செய்த ஆர்வக்கோளாறுன்னு சொல்லிகிட்டு இருக்காங்க. எப்படியோ இப்ப வரைக்கும் நல்லா பொழுது போகுது.
//
Engr Sulthan
தமிழில் பெயர் வைக்காதவர்கள் தமிழரில்லை..சீமான்
ஜூடி கேமா பாக்யராஜ்..
அக்கா லொபின்.
தூத்துக்குடி, ராதாபுரம் சட்டமன்ற டம்ளர் கட்சி வேட்பாளர்களின்
பெயர்களைப் பாருங்க… //
//வேற வாய் @konavaai சீமான் சொல்வதெல்லாம் சினிமாவா எடுத்தா தெறிக்க
தெறிக்க ஓடும். பாவம் மனுசன் கரடியா கத்தி ரெண்டு மெழுகுவத்திய கைல
குடுத்துட்டானுவ ;எரியுமா????//
//கில்லர் @paidkiller 13h13 hours ago
ராஜாஜி குலக்கல்வி திட்டம் கொண்டு வந்தார். ஆனா அவர் ஊழல் பண்ணலையே!
சீமான் அதிபுத்திசாலித்தனங்கள்! //
//சிவா C @iamsiva_c
சீமான் னு டைப் பண்ணா RT ஆகுறமாதிரி BOT பண்ணி வச்சிருக்காங்க டோய் என்கை
சும்மா இருக்காது டோய் மாட்டிக்கிட்டேனே டோய் #கவுண்டமணி வாய்சில்
படிக்க//
//The Prince @Prince_offl இப்படியே bot செட் பண்ணேனா நாலு ஓட்டு கூட
வுலாது… மிஸ்டர் சீமான் ! //
கமல்ஹாசன் ட்விட்டர் அக்கௌண்ட் ஆரம்பித்து ஆக்டிவாக இருக்கிறார். நேற்று
நைஜீரியா அதிபரின் ஊழல் ஒழிப்புக்கு ஆதரவாக ட்விட் போட,
//வீர தீர சூரன்
@BharathiBigB
எனக்கு உள்ளூர் அரசியல்ன்னாதாங்க பயம் மத்தபடி ஐ லவ் அரசியல்ங்க //
என லொள்ளு ரிப்ளைகளாக எழுதி அவரை கலாய்த்து எடுத்துவிட்டனர் தமிழர்கள்.
லீப் ஆண்டின் பிப்ரவரி 29ம் தேதியான நேற்று இயக்குநர் சசிக்குமார் என்
பெயரில் ஏற்கனவே நிறைய பேர்கள் இங்கு இருப்பதால் நானும் ட்விட்டரில்
வரவேண்டியதாகி போச்சு” என தன் முதல் ட்விட் எழுதி களம்
புகுந்தார்.”அதெல்லாம் இருக்கட்டும் இதுவாது நீங்கதானா என உள்ள வந்தவுடனே
கட்டையை போட்டனர்.
இப்படியாக தமிழுலகம் இயங்கி கொண்டிருக்க ஆஸ்கர் விருது வாங்கிய
லியார்னொடோ டிகாப்ரியோ, அதையெல்லாம் அப்பவே மறந்துட்டேன் என்பது போலவிருது வாங்கிய சில மணி நேரங்களில் தன் முகநூலில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராகவும்,அமோஸனில் நதிகளில் கலக்கப்பட்ட எண்ணைக்கழிவுகள் குறித்தும் கவலையும்,ஆவேசமுமாய் ஸ்டேடஸ் போட்டுக்கொண்டிருந்தார். அவர் ஆஸ்கர் வாங்கிய காட்சி அவரது ரசிகர்களுகு பிடித்து இருந்தாலும் எனக்கு பிடித்தது, அதன் பின் அந்த விருது குறித்து எந்த பெருமிதமும் இன்றி அவரு மொபைலில் ட்விட் போட்டுக்கொண்டிருக்கும் படம்தான்.
-லாக் ஆப்,”
