சென்னை பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை இன்று (ஜூன் 10) பெய்து வருகிறது.
சென்னையில் இன்று காலை முதல் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, சிந்தாதரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, அசோக் நகர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
மேலும், சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை இன்று இரவு 8.30 மணி வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று இரவு வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மாலை 5 மணி முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…