டெல்டா முதல் சென்னை வரை இன்று (நவம்பர் 28) இரவு தொடங்கி மிதமான மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக அடுத்த3 நாட்களில் சென்னை முதல் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை வரையில் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது.
இந்த நிலையில் பிரபல தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ஃபெங்கல் புயல் குறித்து இன்று அப்டேட் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதில் “ஏற்கெனவே தெரிவித்தபடி இன்று டெல்டா முதல் சென்னை வரை இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். பகலில் குளிர்ந்த காற்றை மக்கள் அனுபவிக்கலாம்.
29 முதல் தீவிர மழை தொடங்கி 30ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம், பாண்டி, கடலூர் மற்றும் விழுப்புரம் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். அதன்பின்னர் மழையின் தாக்கம் படிபடியாக குறையும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விதிகளை மீறி மோசமாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் : சு.வெங்கடேசன் கண்டனம்!
“தமிழ்நாட்டிற்கு நியாயமான நிதி எப்போது கிடைக்கும்?” : எம்.பி. வில்சன் கேள்வி!