அலர்ட் ஆகிக்கோங்க மக்களே… 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Published On:

| By Minnambalam Login1

cyclone dana odisha

தென்கிழக்கு அரப்பிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று (அக்டோபர் 24) 19 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், டானா (Dana) புயலால் ஓடிசா மற்றும் மேற்கு வங்ககாலத்தின் சில பகுதிகளில் இன்று (அக்டோபர் 24) மற்றும் நாளை (அக்டோபர் 25) சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ டானா புயல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே பிதர்கனிகா மற்றும் தமரா (ஒடிசா)க்கு அருகில் அக்டோபர் 24 நள்ளிரவு முதல் அக்டோபர் 25 ஆம் தேதி காலை வரை கடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது காற்று மணிக்கு 100 – 120 கி.மீ வேகத்தில் வீசும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“24.10.2024 : நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25.10.2024 : நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள்:

வங்கக்கடல் பகுதிகள்:

24.10.2024 முதல் 25.10.2024 வரை :

மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:

24.10.2024 மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 95 முதல் 105 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 115 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்:

24-10-2024 மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 95 முதல் 105 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 115 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழக மீனவர்கள் 128 பேர் கைது… ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!

“மகாராஷ்டிராவை கொள்ளையடிக்கும் பாஜக, ஏக்நாத் ஷிண்டே” – ஆதித்யா தாக்கரே காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share