வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 11) அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நேற்று (நவம்பர் 10) நிலவிய வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி இன்று (நவம்பர் 11) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவியது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அடுத்த ஐந்து நாட்களுக்குச் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 5.8 கிலோ மீட்டர் உயரமுள்ள இந்த புயல் சுழற்சி, அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு – இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சென்னையில் கொட்டப்போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?
4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி… என்ன நடந்தது?