சைபர் க்ரைம் மோசடி: தப்பிப்பது எப்படி?

Published On:

| By Selvam

cyber crime fraud

இணைய வழி மோசடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மோசடியில் பணத்தை மீட்பது காவல்துறையினருக்கு சவாலாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்.

இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் ரூ.5000 கிரிடிட் ஆகும். உங்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை விழுந்திருக்கிறது. எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள். வீட்டிலிருந்தபடியே மாதம் இவ்வளவு சம்பாதிக்கலாம்.

உங்கள் வங்கி கணக்கில் ரூ.10000 கிரிடிட் செய்யப்பட்டுள்ளது என தினமும் பல மெசேஜ்களும் அழைப்புகளும் நம் ஒவ்வொருவரின் அலைபேசிகளையும் தினமும் வந்தடைகிறது. சைபர் க்ரைம் மோசடி தொடர்பாக கடந்த 6 மாதங்களில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சைபர் க்ரைம் கூடுதல் காவல்துறை இயக்குனர் சஞ்சய் குமார் கூறும்போது, “வாட்ஸப், டெலிகிராம், பேஸ்புக், மெசெஞ்சரில் வரும் சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும். முறையான வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் டெபாசிட் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பயிற்சிக்காக பணம் செலுத்துமாறு கேட்டால் அது மோசடியாக இருக்கலாம். அதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். முதலீட்டு வாய்ப்புகளுடன் அணுகினால் வர்த்தக தளத்தை ஆராய்ந்து பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு மோசடியாக ரூ.450 முதல் ரூ.11 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள். நீங்கள் மோசடிக்கு ஆளாகியிருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-க்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

கூட்டணி முறிவு நிலைப்பாட்டில் மாற்றமில்லை: ஜெயக்குமார்

சந்திரமுகி 2 படத்தில் அதிரடி மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share