டிடிஎஃப் வாசனை தொடர்ந்து சர்ச்சையில் புகழ்

Published On:

| By christopher

பைக் ஓட்டியபடி தான் சாகசம் செய்த வீடியோவை, நடிகர் புகழ் வெளியிட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் புகழ். சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட புகழுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

தற்போது திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார்.

அதன் பின்னர், சந்தானத்தின் சபாபதி, என்ன சொல்ல போகிறாய், அஜித்தின் வலிமை, அருண் விஜய்யின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் புகழ் நடித்துள்ளார்.

CWC puhazh viral riding create controversary

தற்போது விஜய் சேதுபதி 46, ஏஜெண்ட் கண்ணாயிரம், குதுகாலம், ஆகஸ்ட் 16 1947, போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மிஸ்டர் ஷூ கீப்பர் படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

கைகளை விட்டபடி பைக் சாகசம்!

இந்நிலையில், நடிகர் புகழ் இன்ஸ்டாவில் தான் பைக்கில் சாகசம் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் ஹெல்மெட் அணியாமல் இரண்டு கைகளைவிட்டு, மீசையை முறுக்கியபடி சாலையில் ஓட்டி சென்று இருக்கிறார்.

https://www.instagram.com/reel/CjNzAQ8JHsN/?utm_source=ig_web_copy_link

இந்த வீடியோ வைரலான நிலையில், புகழ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சாலை விதிகளை மீறிய அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

CWC puhazh viral riding create controversary

சமீபத்தில் சாலை விதிமுறைகளை மீறியதாக டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

தற்போது நடிகர் புகழும் ஹெல்மெட் அணியாமல் சாலை விதிகளை மீறியுள்ள நிலையில், அவரையும் கைது செய்யுங்கள் என்று சென்னை போக்குவரத்து போலீசாரையும் டேக் செய்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

சரியான கதைகள் கிடைக்கவில்லை: குக் வித் கோமாளி புகழ்

கிச்சன் கீர்த்தனா : வேர்க்கடலை – முளைப்பயறு சாலட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share