காதலிக்கும்போதோ அல்லது மிகவும் பிடித்த ஒருவரைக் கொஞ்சும்போதோ, உங்களுக்கு விசித்திரமான ஒரு உணர்வு ஏற்பட்டதுண்டா?
அவர்கள் கன்னத்தைப் பிடித்துப் பலமாகத் கிள்ள வேண்டும், கையை ஓங்கிக் கடிக்க வேண்டும் அல்லது எலும்பு உடையும் அளவுக்குக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தோன்றுமா? “ஐயோ… பாவம் வலிக்குமே” என்று நினைத்தாலும், அந்த ஆக்ரோஷமான ஆசையைக் கட்டுப்படுத்தவே முடியாது.
இதை நினைத்து, “எனக்கு என்னாச்சு? நான் ஏன் இப்படி வன்முறையா நினைக்கிறேன்?” என்று பயப்பட வேண்டாம். இதற்குப் பெயர்தான் ‘கியூட் அக்ரஷன்’ (Cute Aggression).
இது ஏன் ஏற்படுகிறது? (The Science Behind It):
பொதுவாக நமக்குக் கோபம் வந்தால் அடிப்போம்; சந்தோஷம் வந்தால் சிரிப்போம். ஆனால், அளவுக்கு அதிகமான சந்தோஷம் வரும்போது மூளை குழம்பிவிடும்.
உளவியல் ரீதியாக இதை ‘டைமார்பஸ் எக்ஸ்பிரஷன்’ (Dimorphous Expression) என்று கூறுகிறார்கள். அதாவது, நாம் தாங்க முடியாத அளவுக்கு ஒரு பாசிட்டிவ் உணர்வை (Overwhelming positive emotion) உணரும்போது, அதைச் சமநிலைப்படுத்த (Balance) நம் மூளை அதற்கு எதிரான ஒரு உணர்வை வெளிப்படுத்துமாம்.
உதாரணத்திற்கு, அதீத மகிழ்ச்சியில் இருக்கும்போது நமக்குக் கண்ணீர் வருகிறதல்லவா? (Happy Tears). அதுபோலத்தான் இதுவும்! அந்த அன்பைச் சமாளிக்க முடியாமல், மூளை வெளிப்படுத்தும் ஒரு சிறிய ‘வன்முறை’ வடிவம்தான் இந்த ‘கடி’ மற்றும் ‘கிள்ளல்’.
காதலில் இதன் அர்த்தம் என்ன?
உங்கள் பார்ட்னரைக் கடிக்கத் தோன்றுகிறது என்றால், நீங்கள் அவர்கள் மீது பைத்தியக்காரத்தனமான அன்பில் (Crazy Love) இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
பாதுகாப்பு உணர்வு: “இவங்க எனக்கு மட்டும்தான் சொந்தம்” என்ற உள்ளுணர்வின் (Instinct) வெளிப்பாடுதான் இது.
டோபமைன் ரஷ் (Dopamine Rush): பிடித்தவர்களைப் பார்க்கும்போது மூளையில் சுரக்கும் ‘டோபமைன்’ என்ற மகிழ்ச்சி ஹார்மோன், இந்தச் செயலைத் தூண்டுகிறது.
இது நார்மல்தானா?
நூறு சதவீதம் நார்மல்! சொல்லப்போனால், இது ஆரோக்கியமான உறவின் அடையாளம் என்று யேல் பல்கலைக்கழக (Yale University) ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், ஒரே ஒரு கண்டிஷன் – உங்கள் அன்பு அவர்களுக்கு வலி மிகுந்ததாக மாறிவிடக்கூடாது. “செல்லக் கடி” ஓகே… “சதையைப் பிய்க்கும் கடி” நாட் ஓகே!
அடுத்த முறை உங்கள் பார்ட்னரைப் பார்க்கும்போது, பற்களை நறநறவென கடிக்கத் தோன்றினால், தயங்காதீர்கள். அது வன்முறை அல்ல; அது அன்பின் உச்சம்!
அன்பைக் கொட்டுங்கள்… (லேசாகக்) கடித்துக் காட்டுங்கள்!
