முடங்கிய சேவை… ஏர்டெல் நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி!

Published On:

| By christopher

customers angry towards aitel outrage and no response

நாடு முழுவதும் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு, நீண்ட நேரத்திற்கு பின் சீரானது. எனினும் பாதிப்பிற்கான முறையான விளக்கம் அளிக்கப்படாதது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. customers angry towards aitel outrage and no response

சென்னை, புதுச்சேரி, ஆந்திரா, டெல்லி என நாடு முழுவதும் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை நேற்று இரவு 9 மணி முதல் பாதிக்கப்பட்டது. இதனால் பல மணி நேரமாக ஏர்டெல் நெட்வொர்க் சேவையை பெற முடியவில்லை என சமூகவலைதளங்களில் அதன் வாடிக்கையாளர்கள் பதிவிட்டு வந்தனர்.

நான்காம் காலாண்டு நிகர லாபம் 3 சதவீதம் சரிந்து, ரூ.11,022 கோடியாக உள்ளதாக நேற்று அந்நிறுவனம் அறிவித்த சில மணி நேரத்தில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்க், உணவகங்கள், ஆன்லைன் டெலிவரி என பல இடங்களில் UPI மூலம் பரிவர்த்தனை செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

நள்ளிரவில் நீண்ட நேரத்திற்கு பிறகு ஏர்டெல் தொலை தொடர்பு சேவை சீரானது.

எனினும் பாதிப்பிற்கான முறையான விளக்கம் ஏர்டெல் நிறுவனம் தரப்பில் அளிக்கப்படாதது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share