கறிவேப்பிலையில் எந்த உணவு வகையில் சேர்த்தாலும் ஒதுக்கிவிட்டு சாப்பிடுபவர்களே அநேகர். ஆனால், கறிவேப்பிலையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளன. உடலின் உள் காயங்கள் பலவற்றையும் ஆற்றும் குணம் கறிவேப்பிலைக்கு உண்டு. தோலில் இருக்கும் செல்கள் புத்துணர்ச்சி அடையும். முடி வளர்ச்சியை அதிகரிக்கும் இந்த கறிவேப்பிலை தோசை அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
கறிவேப்பிலை – ஒரு கப்
மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
இட்லி புழுங்கல் அரிசி – ஒரு கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – சிறிதளவு
எப்படிச் செய்வது?
அரிசி, வெந்தயத்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, நீரை வடித்து மற்ற பொருட்களோடு சேர்த்து அரைத்து உப்பு சேர்க்கவும். அரைத்த உடனேயே தோசை ஊற்றலாம். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு தோசை ஊற்றி, திருப்பிப் போட்டு வெந்ததும் பரிமாறலாம்.
