–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
சினம் தவிர்த்தால், சீரான நன்மைகள் கிட்டக் கூடிய காலகட்டம்.
பணியிடத்தில் சிடுசிடுப்பும் கடுகடுப்பும் தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். அனுபவம் மிக்க யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். பொறுப்புகளில் கவனம் மிகமிக முக்கியம்.
குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். குழந்தைகள் வாழ்வில் சுப தடைகள் நீங்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலத்தில் கவனம் முக்கியம். வரவு சீராக இருக்கும்.
சொத்து வழக்கில் விட்டுக் கொடுத்தலே நல்லது. செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். நேரான போக்கும், நேர்மையும் மிகமிக முக்கியம்.
அரசுத்துறையில் உள்ளவர்கள், சீரான வளர்ச்சி காணலாம். மேலிடத்தால் உங்கள் திறமை உணரப்படும். எதிர்பாரா இடமாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம்.
அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். மேலிடத்திடம் பாராட்டு, பெருமை பெறுவீர்கள்.
கலைஞர்கள், படைப்பாளிகள் செல்லும் இடத்தின் சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில் அலட்சியம் கூடாது. மாணவர்களுக்கு சோம்பல் கூடாது.
இரவுப் பயணத்தில் இடைவழியில் இறங்க வேண்டாம்.
ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை நோய் உபாதைகள், மறைமுக உறுப்பு பிரச்னை வரலாம்.
நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆவணி மாத நட்சத்திர பலன்: மிருகசீரிஷம் (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன்: ரோகிணி (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன் -கிருத்திகை: (17.8.2024 முதல் 16.9.2024 வரை)