தை மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை

Published On:

| By Selvam

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

14.1.2025 முதல் 12.2.2025 வரை

சீரான போக்கு நிலவும் காலகட்டம். பணியிடத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் மிகமிக முக்கியம். எதிர்பார்த்த உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும்.

வீட்டில் சுமுகப் போக்கு நிலவும். தம்பதியர் இடையே மூன்றாம் நபர் மத்தியஸ்தம் அனுமதிக்க வேண்டாம். பூர்வீக சொத்து சேரும். ஆடை ஆபரணம் சேர்க்கை உண்டு.

செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். அந்நிய முதலீட்டில் அவசரம் வேண்டாம். கலை,படைப்புத் துறையினர் திறகைக்கு ஏற்ப முன்னேறுவீர்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் வீண் அகந்தையை விரட்டுவது முக்கியம்.

இரவு நேரப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். காது,மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். சுக்கிரன் வழிபாடு, சுபிட்சம் சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தை மாத நட்சத்திர பலன்கள்: பரணி

தை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel