தை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி

Published On:

| By Selvam

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

14.1.2025 முதல் 12.2.2025 வரை

சங்கடங்கள் தீரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் நிச்சயம் வரும். யாருடனும் வீண் சச்சரவு தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் குதூகலம் குடிபுகும். தம்பதியர் இடையே இருந்த சுணக்கம் நீங்கும். அது தொடர மனம்விட்டுப் பேசுவது நல்லது. வாரிசுகள் விஷயத்தில் அதீத கண்டிப்பு வேண்டாம். வரவை சேமிக்கப் பழகுங்கள்.

செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். வர்த்தக கடன்களை நேரடியாக பைசல் செய்யுங்கள். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலை,படைப்புத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும்.

வாகனப்பயணத்தில் நிதானம் மிக மிக முக்கியம். தினமும் சிறிதுநேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். வாய்க்கட்டுப்பாடு நோய் தவிர்க்க உதவும். அடிவயிறு கழிவு உறுப்பு உபாதை வரலாம். சரஸ்வதி வழிபாடி சந்தோஷம் தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஈரோடு கிழக்கு : பெண் வேட்பாளரை களமிறக்கிய சீமான்… யார் இந்த சீதாலட்சுமி?

கோவை பீப் கடை விவகாரம்: பாஜக அலுவலகம் மீது வீசப்பட்ட மாட்டுக்கறி!

ஹெல்த் டிப்ஸ்: தினமும் இரவில் பால் குடிப்பது நல்லதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel