purattasi Ayilyam nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ஆயில்யம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

ஜோதிடம்

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

வெறுப்பின்றிச் செயல்பட்டால், விருப்பம்போல் வெற்றிபெறும் காலகட்டம். பணியிடத்தில் படபடப்பும், பரபரப்பும் வேண்டாம். எந்தப் பணியையும் நேரடியாக கவனியுங்கள்.

இல்லத்தில் இனிய சூழல் தேடிவரும். வரவு அதிகரித்தாலும் செலவும் சேர்ந்தே வரும். சுபகாரியத் தடைகள் குல தெய்வ வழிபாட்டால் நீங்கும். கர்ப்பிணிகள் கவனமா இருங்கள்.

குடும்பத்தில் பிறர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். செய்யும் தொழிலில் திட்டமிடலும் உழைப்பும் அவசியம். வங்கிக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துங்கள். கடன் அட்டைகளை பத்திரமா வைச்சுக்குங்க.

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு நிதானம் மிகமிக முக்கியம். யாருக்கும் ஜவாப் ஜாமீன் தரவேண்டாம். கலை, படைப்புத் துறையினர் வீண் கேளிக்கை தவிர்த்தால் விரைந்து முன்னேறலாம்.

மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பது முக்கியம். பயணப்பாதையில் உடைமைகள் பத்திரம்.

அஜீரணம், உணவுக்குழாய் உபாதை, அமிலச்சுரப்பு அதிகரிப்பு, அல்சர் உபாதைகள் வரலாம். சுருட்டப்பள்ளி தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபிட்சம் சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மிருகசீரிஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *