புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

Published On:

| By Selvam

Puratasi month natchathira palan Krittikai! (From 17.9.2024 to 17.10.2024)

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் பரபரப்பும் பதற்றமும் தவிருங்கள். உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.

திட்டமிட்டு செயல்பட்டால் அனுகூலம் உருவாகும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். தம்பதியரிடையே வீண் சர்ச்சை வேண்டாம்.

வீடு, வாகனம் புதுப்பிக்க யோகம் உண்டு. அசையும் அசையா சொத்து சேர்க்கை ஏற்படும். செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாட்டில் அலட்சியம் கூடாது. அரசு, அரசியலில் உள்ளோர் நிதானத்தால் நிம்மதி பெறலாம்.

முகஸ்துதி நட்பை உடனே உதறுங்கள். கலை, படைப்புத் துறையினர்க்கு கணிசமான வாய்ப்புகள் வரும். சஞ்சலம் சபலத்தால் அவற்றை இழக்க வேண்டாம். மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்திப் படிப்பது நல்லது.

இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். கழிவு உறுப்பு, கண் உபாதைகள் வரலாம். பஞ்சவடி அனுமன் வழிபாடு ஆனந்தம் தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share