புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரோகிணி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

Published On:

| By Selvam

Puratasi Month Nakshatra palan - Rohini!

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டிய மாதம். அலுவலகத்தில் எந்தப் பொறுப்பையும் பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களுடன் சச்சரவு தவிருங்கள். பதவி, இடமாற்றங்கள் தாமதமானாலும் நிச்சயம் வரும்.

வீட்டில் நல்லவை நடக்கத்தொடங்கும். உறவுகளிடம் வீண் மனக்கசப்பு வேண்டாம். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள்.

பூர்வீக சொத்தில் இழுபறி நிலை மாறும். செய்யும் தொழிலில் முழு முயற்சி முக்கியம். ஒப்பந்தப் பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அரசு, அரசியல்துறையில் இருப்போர், நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம்.

ஆண்,பெண் நட்பில் அதிக நெருக்கம் வேண்டாம். கலைஞர்கள்,படைப்பாளிகளுக்கு ஏற்றம் உண்டு. மாணவர்கள், சோம்பலை விரட்டுவது முக்கியம். மன அழுத்தம், தூக்கமின்மை, அடிவயிறு உபாதைகள் வரலாம். பயணத்தில் நிதானம் முக்கியம். திருவரங்கன் வழிபாடு திருப்தி தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பரணி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel