மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: உத்தரம்!

Published On:

| By christopher

சின்சியராகச் செயல்பட்டால், சீரான நன்மைகள் கிட்டக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் படபடப்பும் பரபரப்பும் தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளிடம் பேசும்போது அவர்களின் வார்த்தைகளை கவனமாகக் கேட்பது முக்கியம்.

அனுபவம் மிக்க யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். உங்கள் பொறுப்பை பிறரிடம் ஒப்படைப்பதும் கூடாது.

குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். குழந்தைகள் வாழ்வில் சுப தடைகள் நீங்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலத்தில் கவனம் முக்கியம். வரவு சீராக இருக்கும். சொத்து வழக்கில் விட்டுக் கொடுத்தலே நல்லது.

செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். வளர்ச்சி தொடர்ச்சியாக, நேரான செயல்களும் நேர்மையும் மிகமிக முக்கியம்.

அரசுத்துறையில் உள்ளவர்கள் திறமை மேலிடத்தால் உணரப்படும். அதனால் ஆதரவும் ஆதாயமும் அதிகரிக்கும்.

அரசியலில் இருப்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்பட்டால், மேலிடத்திடம் பாராட்டு, பெருமை பெறுவீர்கள்.

கலைஞர்கள், படைப்பாளிகள் செல்லும் இடத்தின் சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில் அலட்சியம் கூடாது.

மாணவர்கள் வீண் கேளிக்கைகளை தவிர்ப்பது நல்லது. இரவுப் பயணத்தில் இடைவழியில் இறங்க வேண்டாம்.

ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை நோய் உபாதைகள், மறைமுக உறுப்பு பிரச்னை வரலாம். விஷ்ணு வழிபாடு விசேஷ நன்மை தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூரம்

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!

படுக்கை அறையையொட்டி இருந்த ஜெனரேட்டர்… ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் பலி : பின்னணி என்ன?

‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் : தெலுங்கு தேசம் நிபந்தனையற்ற ஆதரவு!

ஆவின் அம்பத்தூர் பண்ணைக்கு ரூ.5.10 கோடி அபராதம்: எதற்காக?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share