-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
நிதானமாகச் செயல்பட வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புகளில் திட்டமிடல் மிக முக்கியம்.. திறமை பாராட்டப்படும் சமயத்தில், தற்பெருமை தவிருங்கள்.
அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். பணி சார்ந்த பயணங்களில் கோப்புகள் பத்திரம். தேவையற்ற வாக்குவாதம் எவரிடமும் வேண்டாம்.
குடும்பத்தில் சுமுகமான போக்கு நிலவும். அது தொடர, விட்டுக்கொடுத்தல் முக்கியம். உறவுகளிடம் வீண் தர்க்கமும் தகராறும் வேண்டாம்.
வழக்குகளில் சாதகமாகத் தீர்வு வரும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வீடு, மனை பத்திரங்களை பத்திரமாக வையுங்கள்.
யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையாட்ட வேண்டாம். செய்யும் தொழிலில் முயற்சிக்கு ஏற்ப வளர்ச்சி உருவாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாடு முக்கியம்.
அரசுத்துறையினர் கவனச் சிதறலைத் தவிருங்கள். எதிர்பாரா இடமாற்றம் வரலாம்.
அரசியல் சார்ந்தவர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள்.
படைப்புத் துறையினருக்கு, பாராட்டுகள் கிடைக்கும். அதேசமயம்,புறம்பேசுவோர் நட்பு கனவிலும் வேண்டாம்.
மாணவர்கள் திறமைக்கு உரிய பெருமைகளைப் பெறுவீர்கள். இரவுப் பயணம் இயன்றவரை தவிருங்கள்.
ரத்தத் தொற்று, தலைசுற்றல், கண் உபாதைகள் வரலாம். சிவன்வழிபாடு சிறப்பு சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
5 கி.மீ தொலைவு ஓட்டம்… 30 விநாடியால்… ஆயுதப்படை போலீஸ் எடுத்த முடிவு!
தங்கம் விலை உயர்வு : இன்று எவ்வளவு தெரியுமா?
வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!
தமிழக மீனவர் பிரச்சனை : இலங்கை அதிபர் ஏகேடி – பிரதமர் மோடி சந்திப்பில் எடுத்த முடிவு என்ன?
2023-24-ம் ஆண்டில் எல்.ஐ.சியின் கோரப்படாத முதிர்வு தொகை இத்தனை கோடிகளா?
சிறைகளில் முறைகேடு: வழக்கு பதிவில் தாமதம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!