அல்லவை குறைந்து நல்லவை அதிகரிக்கக் கூடிய காலகட்டம். அதைத் தலைகனமாக மாற்றிக்கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும்.
பொறுப்புகளை திட்டமிட்டு செயல்பட்டால், பெருமைகள் தொடரும் பதவியுடனான இடமாற்றம் வரவாய்ப்பு உண்டு. ஆராயாமல் பிறர் பேச்சைக் கேட்க வேண்டாம். பணிசார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும் புலம்பாமல் ஏற்பதே நல்லது.
குடும்பத்தில் உறவுகள் வருகையும் அதனால் ஆனந்தமும் அதிகரிக்கும். இளம் வயதினர் சுபகாரியத்தில் பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் விலகும்.
செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப வளர்ச்சி அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் சிலருக்கு மகிழ்ச்சி தரும்.
அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு சீராக இருக்கும். சட்டப்புறம்பின் நிழலைக் கனவிலும் தவிருங்கள்.
படைப்புத் துறையினர் திட்டமிடலில் சறுக்கல் கூடாது. ரகசியங்களைப் பொது இடங்களில் பகிர வேண்டாம், மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்குங்கள்.
வாகனத்தில் செல்லும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். லாகிரியைத் தவிருங்கள். நரம்பு, எலும்பு, தலைசுற்றல், கழுத்து உபாதைகள் வரலாம். கந்தன் வழிபாடு களிப்பு தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூரம்
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!
ஒற்றை லெட்டரால் வசமாக சிக்கும் அல்லு அர்ஜூன்… காய் நகர்த்தும் போலீஸ்!
ஒரே மாதிரி தேர்தலை கூட நடத்த முடியவில்லை : சு.வெங்கடேசன்
சரியாக சிகிச்சையளிக்காத மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? மவுனமும் ஜாமீனும்!
படுக்கை அறையையொட்டி இருந்த ஜெனரேட்டர்… ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் பலி : பின்னணி என்ன?
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் : தெலுங்கு தேசம் நிபந்தனையற்ற ஆதரவு!