-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
(16.12.2024 முதல் 13. 1.2025)
அமைதியாக இருக்கவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் தானுண்டு தன்வேலை உண்டு என்று இருப்பதே நல்லது. பொறுப்புடன் செயல்பட்டால் மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.
பிறர் குறைகளைப் பெரிதுபடுத்திப் பேசவேண்டாம். திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டால், எதிர்பார்க்கும் இடமாற்றம், உயர்வுகள் கைகூடிவரும்.
உடனிருக்கும் யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபகாரியங்களில் வீண் குழப்பம் தவிருங்கள்.
மூன்றாம் நபர் முன் குடும்ப உறுப்பினர் யாரையும் மட்டம்தட்டிப் பேசவேண்டாம்.
தம்பதியர் பரஸ்பரம் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். வாரிசுகளிடம் அதீதக் கண்டிப்பு வேண்டாம்.
ஆடை, ஆபரணம் சேரும். இளம் வயதினர் சுபகாரியத்தில் பெரியோர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள்.
செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். கூட்டுத் தொழிலில் நிதானம் முக்கியம்.
அரசுத் துறையினர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள். பணிசார்ந்த விவரங்களை உங்கள் நிழலிடமும் பகிர வேண்டாம்.
அரசியல் சார்ந்தவர்கள் அடக்கமாக இருந்தால் அநேக நன்மை கிட்டும். படைப்பாளிகள் திறமைக்கு உரிய உயர்வுகளை நிச்சயம் பெறுவீர்கள்.
மாணவர்கள் எதிர்காலத்துக்கான திட்டமிடலை கவனமாகச் செய்வது நல்லது.
வாகனப் பயணத்தில் லாகிரி வஸ்துவுக்கு இடம்தர வேண்டாம்.
நரம்பு, ரத்தநாளம், தலை, பற்கள், மூட்டு உபாதைகள் வரலாம். ரங்கநாதர் வழிபாடு வாழ்வை ரம்யமாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ஹஸ்தம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூரம்
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை!
ஒரே நாடு ஒரே தேர்தல் – அரசியலமைப்பு மீதான தாக்குதல் : ஆ.ராசா
ஒற்றை லெட்டரால் வசமாக சிக்கும் அல்லு அர்ஜூன்… காய் நகர்த்தும் போலீஸ்!
ஒரே மாதிரி தேர்தலை கூட நடத்த முடியவில்லை : சு.வெங்கடேசன்
சரியாக சிகிச்சையளிக்காத மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? மவுனமும் ஜாமீனும்!