மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூராடம்!

Published On:

| By christopher

நாவடக்கத்துடன் இருந்தால் நன்மைகள் ஏற்படக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். அதேசமயம், உடனிருப்போர் குறையை பெரிதுபடுத்த வேண்டாம்.

அயல்நாட்டுப் பணிவாய்ப்பில் முழுமையான விதிக்கட்டுப்பாடு அவசியம். சிலருக்கு புதிய பணிவாய்ப்பு அமையும். அதில் நிதானம் முக்கியம்.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். உறவுகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். அதேசமயம் தம்பதியர் இடையே மூன்றாம் நபர் மத்தியஸ்தத்திற்கு இடம்தர வேண்டாம்.

பெற்றோர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பொருள் சேரும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள்.

செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படத்தொடங்கும். அது தொடர, நேரடி கவனமும் நேர்மையும் தேவை. புதிய முதலீடுகளில் அவசரம் தவிருங்கள்.

அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினர், கவனத்தை சிதறவிடாமல் இருப்பது முக்கியம்.

மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டலைக் கேளுங்கள். தினமும் சிறிது நேரமாவது குலதெய்வத்தை கும்பிடுங்கள்.

இரவு நேரப் பயணத்தில் வழியில் இருட்டில் தனியே இறங்க வேண்டாம். தூக்கமின்மை, மன அழுத்தம், தலைவலி, முக உறுப்பு உபாதைகள் ஏற்படலாம். இஷ்ட அம்மன் வழிபாடு, இனிமை சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ஹஸ்தம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூரம்

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை!

ஒற்றை லெட்டரால் வசமாக சிக்கும் அல்லு அர்ஜூன்… காய் நகர்த்தும் போலீஸ்!

ஒரே மாதிரி தேர்தலை கூட நடத்த முடியவில்லை : சு.வெங்கடேசன்

சரியாக சிகிச்சையளிக்காத மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? மவுனமும் ஜாமீனும்!

படுக்கை அறையையொட்டி இருந்த ஜெனரேட்டர்… ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் பலி : பின்னணி என்ன?

‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் : தெலுங்கு தேசம் நிபந்தனையற்ற ஆதரவு!

ஆவின் அம்பத்தூர் பண்ணைக்கு ரூ.5.10 கோடி அபராதம்: எதற்காக?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share