-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
எண்ணம் சீராக இருந்தால், ஏற்றம் ஏற்படும் காலகட்டம். அலுவலகத்தில் அனுகூலக்காற்று வீசத்தொடங்கும். உடனிருப்போர் ஆலோசனைகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.
தாமதமானாலும் பொறுமையாக இருந்தால் நிச்சயம் உயர்வுகள் வரும். பணியிட ரகசியங்களைப் பிறரிடம் பகிர வேண்டாம்.
வீட்டில் நிம்மதியான சூழல் நிலவும். ரத்த பந்த உறவுகளால் பெருமை சேரும். வாரிசுகள் விஷயத்தில் அலட்சியம் கூடாது. வரவை சேமிப்பது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும்.
சுபகாரியங்களில் பெரியோர் வழிகாட்டலைக் கேளுங்கள். செய்யும் வர்த்தகம் எதுவானாலும் அதில் நேரடி கவனம் முக்கியம். ஒப்பந்தங்கள் எதையும் நிதானமாகப் படித்துக் கையெழுத்திடுங்கள்.
அரசுத்துறையில், அரசியல் சார்ந்தவர்கள், அமைதியைக் கடைபிடியுங்கள். யாருக்காகவும் சட்டதிட்டங்களை கனவிலும் மீறவேண்டாம்.
கலைத்துறை, படைப்புத் துறையினர், வாய்ப்புகளை அலட்சியத்தால் விரட்டிவிட வேண்டாம்.
மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. பயணத்தில் போதுமான ஓய்வு மிக முக்கியம்.
ரத்த அழுத்த மாறுதல்,பரம்பரை உபாதைகள், ஹார்மோன் பிரச்னைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூரம்
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!
படுக்கை அறையையொட்டி இருந்த ஜெனரேட்டர்… ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் பலி : பின்னணி என்ன?
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் : தெலுங்கு தேசம் நிபந்தனையற்ற ஆதரவு!