-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
சொல்லில் நிதானம் இருந்தால் எல்லாவகையிலும் நன்மைகள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். புதிய பொறுப்புகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப உயர்வுகளும் கிட்டும். மேலதிகாரிகளிடம் பேசும்போது தற்பெருமையைத் தவிருங்கள்.
குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். வரவு அதிகரித்தாலும் செலவும் சேர்ந்து வரும். தரல், பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். பிறமொழி மனிதர்களுடன் வீண் தர்க்கம் வேண்டாம்.
வாரிகளால் பெருமை உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் வளர்ச்சி சீராகும். நேரான செயல்களால் அது மேலும் வளரும். புதிய முதலீட்டில் அவசரம் வேண்டாம்.
அரசியலில் உள்ளவர்கள் வார்த்தைகளில் நிதானம் தேவை. பொது இடங்களில் கண்ணியத்தைக் கடைபிடியுங்கள். அரசுப்பணி புரிபவர்களுக்கு ஆதரவும் ஆதாயமும் அதிகரிக்கும். பணியிடக் கோப்புகளை பத்திரமாக வையுங்கள்.
கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு பெயரும் புகழும் கிட்டும். வாய்ப்புகளை சின்சியராகச் செய்வது அவசியம்.
மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது. தலைவலி, ரத்தநாள உபாதை, தொற்றுப் பிரச்னைகள் வரலாம். வாகனப் பழுதை உடனுக்குடன் சீரமையுங்கள். ராகவேந்திரர் வழிபாடு ரம்யமாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கம் விலை உயர்வு : இன்று எவ்வளவு தெரியுமா?
வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!
தமிழக மீனவர் பிரச்சனை : இலங்கை அதிபர் ஏகேடி – பிரதமர் மோடி சந்திப்பில் எடுத்த முடிவு என்ன?
2023-24-ம் ஆண்டில் எல்.ஐ.சியின் கோரப்படாத முதிர்வு தொகை இத்தனை கோடிகளா?
சிறைகளில் முறைகேடு: வழக்கு பதிவில் தாமதம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!
பியூட்டி டிப்ஸ்: உதட்டு கருமை நீங்க… வீட்டிலேயே இருக்கு வழி!