யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குரோதி வருட மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: 16.12.2024 முதல் 13. 1.2025 வரை
கிருத்திகை
வார்த்தைகளில் கவனம் இருந்தால் வாழ்வில் நன்மைகள் தொடர்ச்சியாக வரும் காலகட்டம்.
அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம்.
மேலதிகாரிகளிடம் வீண் ரோஷம் வேண்டாம். பணிகளில் நேரம்தவறாமை முக்கியம்.
வீட்டில் சுமுகப் போக்கு நிலவும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.
வழக்குகளில் சாதகமான தீர்வு கிட்டும்.
வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம்.
சுபகாரியங்களில் வீண் செலவைத் தவிருங்கள்.
செய்யும் தொழிலில் நிதானமான போக்கு நிலவும்.
புதிய முதலீடுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.
அரசு, அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு தொடரும்.
பொது இடங்களில் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள்.
கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வந்து சேரும்.
எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள்.
மாணவர்கள் கவனச் சிதறல் தவிர்த்து கருத்து ஒன்றிப் படிப்பது நல்லது.
தலைவலி, அடிவயிறு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம்.
மகான்கள் வழிபாடு மங்களம் சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘ஃபெஞ்சல்’ புயல்: சென்னையில் காற்றுடன் கனமழை… வேளச்சேரி மேம்பாலத்தில் கார் பார்க்கிங்!