தன்னம்பிக்கையால் உயர்வுகளைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். உடனிருப்போரால் பாராட்டப்படுவீர்கள்.
பணத்தைக் கையாள்வதில் கவனம் முக்கியம். எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள். கோப்புகளைக் கொண்டுசெல்கையில் கவனச் சிதறல் கூடாது.
வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். விட்டுக்கொடுப்பதை வழக்கமாக்குங்கள். வாழ்க்கைத்துணையால் சீரான நன்மைகள் கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம்.
கடன் தருவது, பெறுவதை உடனுக்குடன் எழுதி வையுங்கள். மூன்றாம் நபர் யாரையும் தம்பதியரிடையே சமரசத்திற்கு அனுமதிக்க வேண்டாம்.
செய்யும் தொழிலில் லாபம் சீராகும். உங்களிடம் பணிபுரியும் யாரையும் மட்டம்தட்டிப் பேசவேண்டாம். கனரகம், ரசாயனத் தொழிலில் நிதானம் முக்கியம்.
அரசியல்வாதிகள் பொறுமையாக் இருப்பதே நல்லது. சிலருக்கு எதிர்பாரா பதவி, பொறுப்புக்கு வாய்ப்பு உண்டு.
அரசாங்கப் பணியில் உள்ளோர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். படைப்பாளிகள். வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள்.
பயணத்தில் பிறர் தரும் உணவு பானத்தை ஏற்பது கூடாது. காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள் வரலாம். சுதர்சனர் வழிபாடு சுபிட்சம் சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூரம்
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!
படுக்கை அறையையொட்டி இருந்த ஜெனரேட்டர்… ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் பலி : பின்னணி என்ன?
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் : தெலுங்கு தேசம் நிபந்தனையற்ற ஆதரவு!