-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
(16.12.2024 முதல் 13. 1.2025)
கவனமாகச் செயல்பட்டால் கஷ்டங்கள் நீங்கும் காலகட்டம். அலுவலகத்தில் எந்த சமயத்திலும் கவனச் சிதறல் கூடவே கூடாது. இடமாற்றம் வந்தால் மறுக்காமல் ஏற்பதே நல்லது.
சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்பு தள்ளிப்போகலாம் அது நன்மைக்கே என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பிறர் பேச்சைக் கேட்டு இருக்கும் பணியை விடவேண்டாம்.
வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விட்டுக் கொடுத்துப்போனால், பிரிவும் ,குழப்பமும் வராமல் இருக்கும். வாழ்க்கைத் துணை வார்த்தைகளில் அக்கறை செலுத்துங்கள்.
செலவை முறைப்படுத்துங்கள். வேண்டாத சகவாசம் வீணான பிரச்னைக்கு வழிகாட்டும் உடனே உதறுங்கள்.
செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம்.
அரசுத்துறை சார்ந்தவர்கள் பொறுப்புகள் எதிலும் நேரடி கவனம் செலுத்துங்கள். துறைசார்ந்த விஷயங்களை முழுமையாக திட்டமிடுங்கள்.
அரசியல் சார்ந்தவர்கள் பொது இடங்களில் திட்டங்களைத் தன்னிச்சையாக அறிவிக்க வேண்டாம்.
படைப்பாளிகள், சோம்பல் விட்டால், சாதனைகள் படைக்கலாம். மாணவர்கள் கவனத்தை ஒருநிலைப்படுத்துங்கள்.
பயணத்தில் சாலை விதிகளை மதிப்பது அவசியம். அலர்ஜி, அல்சர், நரம்பு உபாதைகள் வரலாம். சீதா ராமர் வழிபாடு, சீரான நன்மை தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூரம்
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!
ஒற்றை லெட்டரால் வசமாக சிக்கும் அல்லு அர்ஜூன்… காய் நகர்த்தும் போலீஸ்!
படுக்கை அறையையொட்டி இருந்த ஜெனரேட்டர்… ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் பலி : பின்னணி என்ன?
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் : தெலுங்கு தேசம் நிபந்தனையற்ற ஆதரவு!