மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: அவிட்டம்!

Published On:

| By Kavi

Margazhi Month Avittam Natchathiram Rasi Palan

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

(16.12.2024 முதல் 13. 1.2025)

சுறுசுறுப்பை வளர்த்துக்கொண்டால், சுபிட்சங்கள் அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வந்து சேரும்.

உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். இடமாற்றம், பதவியைப்பெற நேரடி முயற்சிகளே நல்லது. சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு தடைபடலாம். அது நன்மைக்கே.

வீண் ரோஷம் தவிர்த்தால், வீட்டில் நிம்மதி நிலவத் தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும்.

வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் தடை நீங்கிக் கைகூடும். வீடு, வாகனம் சார்ந்த தஸ்தாவேஜுகளை பத்திரமாக வையுங்கள். ஆபரணங்கள் எதையும் இரவல் தரவோ பெறவோ வேண்டாம்.

செய்யும் தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். அரசியல் சார்ந்தவர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். முகஸ்துதி நபர்களைத் தவிருங்கள்.

அரசுத்துறையினர்க்கு பொறுப்புகள் அதிகரிக்கும். படைப்புத் துறையினர் வாக்குறுதிகளில் கவனமாக இருங்கள். வாய்ப்புகளை முழு கவனத்துடன் செய்யுங்கள்..

மாணவர்களுக்கு நட்புகளால் பிரச்னை வரலாம், கவனமாக இருங்கள். வாகனத்தில் வேகக்கட்டுப்பாடு முக்கியம்.

தூக்கமின்மை, ஒற்றைத் தலைவலி, கழுத்து உபாதைகள் வரலாம். செந்திலாண்டவர் வழிபாடு செழுமை சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ஹஸ்தம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூரம்

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை!

ஒரே நாடு ஒரே தேர்தல் – அரசியலமைப்பு மீதான தாக்குதல் : ஆ.ராசா

ஒற்றை லெட்டரால் வசமாக சிக்கும் அல்லு அர்ஜூன்… காய் நகர்த்தும் போலீஸ்!

ஒரே மாதிரி தேர்தலை கூட நடத்த முடியவில்லை : சு.வெங்கடேசன்

சரியாக சிகிச்சையளிக்காத மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? மவுனமும் ஜாமீனும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share