சோம்பலை விரட்டினால், கஷ்டங்கள் படிப்படியாக நீங்கத் தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப அந்தஸ்து உயரும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
அதேசமயம், மறைமுக எதிரிகள் பலம் அதிகரிக்கலாம். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள்.
இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். உறவுகளால் வசந்தம் வரும். சுபகாரியங்கள் மனம்போல கைகூடி வரும்.
வரவை சுபசெலவாக்குவது புத்திசாலித்தனம். குடும்பத்துப் பெரியோர் உடல்நலனில் அக்கறை அவசியம்.
செய்யும் தொழிலில் சுணக்கம் நீங்கும். பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட், சூதாட்ட முதலீடுகள் தவறியும் வேண்டாம். அரசுத் துறையினரின் திறமை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள்.
அரசியல் சார்ந்தவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினர் திறமைக்கு உரிய ஏற்றத்தைப் பெறுவீர்கள். அயல்நாட்டுப் பயணத்தில் நடைமுறை சட்டத்தை மதித்தல் அவசியம்.
மாணவர்கள் திறமையால் பெருமை பெறுவீர்கள். பயணப் பாதையில் சுகாதாரமில்லா உணவே நஞ்சாகலாம் கவனமாக இருங்கள். சுளுக்கு, பல், மூட்டு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு துளிர்க்கச் செய்யும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ஹஸ்தம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூரம்
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை!
ஒற்றை லெட்டரால் வசமாக சிக்கும் அல்லு அர்ஜூன்… காய் நகர்த்தும் போலீஸ்!
ஒரே மாதிரி தேர்தலை கூட நடத்த முடியவில்லை : சு.வெங்கடேசன்
சரியாக சிகிச்சையளிக்காத மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? மவுனமும் ஜாமீனும்!
படுக்கை அறையையொட்டி இருந்த ஜெனரேட்டர்… ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் பலி : பின்னணி என்ன?
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் : தெலுங்கு தேசம் நிபந்தனையற்ற ஆதரவு!