–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
எண்ணம் சீராக இருந்தால், ஏற்றம் ஏற்படும் காலகட்டம்.
பணியிடத்தில் படபடப்பும் அவசரமும் வேண்டாம். நிதானமே நிலையான நன்மை தரும். மேலிடத்தின் ஆதரவு கிட்டும். உடனிருப்போர் தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம். தாமதமானாலும் பொறுமையாக இருந்தால் நிச்சயம் உயர்வுகள் வரும்.
வீட்டில் நிம்மதியான சூழல் நிலவும். ரத்த பந்த உறவுகளால் பெருமை சேரும். வாரிசுகள் விஷயத்தில் அலட்சியம் கூடாது.
வரவை சேமிப்பது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும். சுபகாரியங்களில் பெரியோர் வழிகாட்டலைக் கேளுங்கள்.
செய்யும் வர்த்தகம் எதுவானாலும் அதில் சேரடி கவனம் முக்கியம். ஒப்பந்தங்கள் எதையும் நிதானமாகப் படித்துக் கையெழுத்திடுங்கள்.
அரசுத்துறையில், அரசியல் சார்ந்தவர்கள், நிதானத்தைக் கடைபிடியுங்கள். சட்டதிட்டங்களை கனவிலும் மீறவேண்டாம்.
கலைத்துறை, படைப்புத்துறையினர் வாய்ப்புகளை வாய்ச்சவடாலால் விரட்டிவிட வேண்டாம்.
மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.
இரவுப் பயணத்தில் உடைமைகள் பத்திரம்.
கழுத்து, முதுகு, மூட்டு உபாதை வரலாம். சிவன் வழிபாடு சீரான நன்மை தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேன
ஆவணி மாத நட்சத்திர பலன்: அஸ்வினி (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன் -பரணி (17.8.2024 முதல் 16.9.2024 வரை)