கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: உத்திராடம்!

ஜோதிடம்

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

உத்திராடம்

திட்டமிட்டு செயல்பட்டால் தொட்டவை துலங்கும் காலகட்டம். எந்த சமயத்திலும் வார்த்தைகளில் நிதானம் முக்கியம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். எதிர்பார்த்த ஏற்றமும் மாற்றமும் ஏற்படும்.

தாமதமான பொறுப்பு, பதவி நிச்சயம் கைகூடி வரும். வெளியூர்,வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. அனுபவஸ்தர்களிடம் சச்சரவு வேண்டாம். பொறுப்புகளில் சலிப்பு கூடாது.

வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். உறவுகளுடன் அன்யோன்யம் ஏற்படும். இளம் வயதினரின் காதல்கனவு ஈடேறும். அசையும் அசையா சொத்து சேரும். வாரிசுகள் வாழ்வில் சுபிட்சம் வரும் பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு.

தொழில் எது செய்தாலும் சோம்பல் தவிர்த்து உழைப்பது உன்னதம் தரும். புதிய ஒப்பந்தங்களில் அவசரம் கூடாது. அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்டப்புறம்பிற்கு இடம்தர வேண்டாம்.

அரசியலில் இருப்பவர்கள் மேலிடத்தின் ஆதரவில் மேன்மை பெறலாம். பொது இடங்களில் வாக்குத் தரவேண்டாம். அரசுப்பணியில் இருப்போர்க்கு உன்னத உயர்வுகள் வரும். எந்த சமயத்திலும் அவசரம் அலட்சியம் தவிருங்கள்.

சினிமா, கலை, படைப்பு, இசைத்துறையில் இருப்போருக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். இரவில் வெளி இடங்களில் நிதானமாக இருங்கள்.

வாகனத்தில் வேகம் வேண்டாம். காது, மூக்கு, தொண்டை உபாதைகள், சுவாசப் பிரச்னைகள் வரலாம். குலதெய்வ வழிபாடு குலம் காக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் : ரோகிணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 – 15. 12.2024) : கிருத்திகை!

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி… வானிலை மையம் எச்சரிக்கை!

காட்டு யானைகளுக்கும் நாட்டு யானைகளுக்கும் கடும் மன அழுத்தம்… கர்ப்பமடைய முடியாத சோகம்!

அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் : அமெரிக்காவிற்கு புதின் எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *