-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குரோதி வருட கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை
சதயம்
அடக்கமாகச் செயல்பட்டால் அனைத்திலும் வெற்றிகிட்டும் காலகட்டம். எந்த சமயத்திலும் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கூடவே கூடாது. அலுவலகத்தில் உங்கள் பொறுப்பு உயரும்.
அதை ஏற்பதோடு இல்லாமல், திட்டமிட்டும் நேரம்தவறாமலும் செயல்பட்டால், தொடர்ந்து உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும்.
சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம். அப்படிச் செல்லும்போது கொண்டு செல்லும் கோப்புகள் பத்திரம்.
இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். வேண்டாத கடன்களைத் தவிருங்கள்.
குடும்பத்தில் யாருடைய தலையீட்டையும் அனுமதிக்க வேண்டாம். வாரிசுகளால் நிச்சயம் பெருமை வரும். பெண்கள் கர்ப்ப காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தொழில் எதைச் செய்தாலும் அதில் முழு கவனம் முக்கியம். உங்களிடம் பணிபுரிவோரிடம் வீண் கடுமை வேண்டாம். பங்குவர்த்தகத்தில் நிதானம் அவசியம்.
அரசுப்பணி புரியக்கூடியவர்கள் நிச்சயம் ஏற்றம்காண்பீர்கள். யாருக்கும் வாக்குறுதி எதுவும் தரவேண்டாம்.
அரசியலில் இருப்பவர்கள் பொது இடங்களில் பேசும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். பிறர் பேச்சைக் கேட்டு, உடனிருப்போரை உதாசீனப்படுத்த வேண்டாம்.
சினிமா, கலை, படைப்புத் துறையினர் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறலாம். நம்பிக்கை துரோகிகளை அடையாளம் கண்டு விலக்குங்கள்.
இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். அடிவயிறு, கழிவு உறுப்பு, தோல் நிறமாற்றம், ரத்த நாள உபாதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு இனிமை சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் : திருவாதிரை!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் : ரோகிணி!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 – 15. 12.2024) : கிருத்திகை!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)