-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குரோதி வருட கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை
பூராடம்
சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டிய காலகட்டம். நேரம் தவறாமல் செய்யும் பணிகளே நேரடியாக உங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும். அலுவலகத்தில் சோம்பலும் சுணக்கமும் கூடாது. எந்தப் பொறுப்பையும் பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.
சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசிப்பது நல்லது. அதேசமயம் தீர்மானங்களை யோசித்துச் செய்யுங்கள்.. பதவி, இடமாற்றங்கள் தாமதமானாலும் நிச்சயம் வரும். அதற்கு உங்கள் செயல்களே காரணமாக அமையும்.
வீட்டில் நல்லவை நடக்கத்தொடங்கும். உறவுகளிடம் வீண் மனக்கசப்பு வேண்டாம். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். பூர்வீக சொத்தில் இழுபறி நிலை மாறும். பெண்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டு.
தொழில் எதுவானாலும் அதில் முழு முயற்சி முக்கியம். ஒப்பந்தப் பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
அரசியலில் இருப்போர், நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். ஆண்,பெண் நட்பில் அதிக நெருக்கம் வேண்டாம். அரசுப்பணி செய்பவர்கள் எதிலும் திட்டமிடுவது முக்கியம். பிறரை நம்பி தெரியாத விஷயத்தில் இறங்க வேண்டாம்.
கலைஞர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள், சினிமா துறையினருக்கு ஏற்றம் உண்டு. மாணவர்கள், சோம்பலை விரட்டுவது முக்கியம். மன அழுத்தம், தூக்கமின்மை, அடிவயிறு உபாதைகள் வரலாம். பயணத்தில் நிதானம் முக்கியம். சமயபுரத்தாள் வழிபாடு சர்வ மங்களம் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் : ரோகிணி!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 – 15. 12.2024) : கிருத்திகை!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)
தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி… வானிலை மையம் எச்சரிக்கை!
காட்டு யானைகளுக்கும் நாட்டு யானைகளுக்கும் கடும் மன அழுத்தம்… கர்ப்பமடைய முடியாத சோகம்!
அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் : அமெரிக்காவிற்கு புதின் எச்சரிக்கை!