கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்:மகம்!

ஜோதிடம்

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

குரோதி வருட கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை

மகம்

பொறுமையாக இருக்கவேண்டிய காலகட்டம். தலைகனம் தவிர்த்துச் செயல்பட்டால், திறமைகள் வெளிப்பட்டு பெருமை சேரும். பணிசெய்யும் இடத்தில் வீண் பதற்றம் தவிருங்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

பிறர் குறை எதையும் பெரிதுபடுத்திப் பேசவேண்டாம். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். இடமாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம்.

குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணையுடன் தர்க்கம் தவிருங்கள். பணவரவை சேமிக்கப் பழகுங்கள். சுபகாரியங்கள் வரும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். கடன்களை முறையாகச் செலுத்துங்கள்.

செய்யும் தொழிலில் வளர்ச்சிக்கு உத்தரவாதம் கிட்டும். அயல்நாட்டு வர்த்தகம் சீராகும். பங்குவர்த்தகத்தில் அவசரம் வேண்டாம்.

அரசியலில் இருப்போருக்கு சீரான உயர்வுகள் வரும். ஆதரவைத் தக்கவைக்க அமைதியான செயல்பாடு முக்கியம். அரசுப்பணி செய்வோர் கவனத்தை சிதறவிடாமல் இருப்பது அவசியம். யாரிடமும் வீண் கோபம் வேண்டாம்.

கலைஞர்கள், படைப்புத்துறையினர்  எதிர்பாலரிடம் எச்சரிக்கையாக இருங்கள். வாகனப்பழுதை உடன் சீர் செய்யுங்கள். சுளுக்கு, சளி, பற்களில் உபாதை வரலாம். துர்க்கை வழிபாடு செழிக்கச் செய்யும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)

எங்கு பார்த்தாலும் லஞ்சம்! – டெல்லி கிரிக்கெட் சங்கம் இப்படியா?

பாலாவின் ‘வணங்கான்’ ரிலீஸ் எப்போது?

கீர்த்தி சுரேஷ் கல்யாணம் கட்டும் ஆண்டனி தாட்டில் யார்?

டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்.. பூந்தமல்லி யார்டில் சோதனை ஓட்டம்!

அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு… உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0