யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குரோதி வருட கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை
ஆயில்யம்
அவசரமும் அலட்சியமும் கூடவே கூடாத காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்புகளை நிதானித்தும் திட்டமிட்டும் செய்யுங்கள். எந்த சமயத்திலும் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு கூடவே கூடாது.
உடனிருக்கும் யாரிடமும் உரசல்போக்கு வேண்டாம். பொறுப்புகளை முறையாகத் திட்டமிட்டுச் செய்யுங்கள். கோப்புகளில் கையெழுத்திடுகையில் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
குடும்பத்தில் விட்டுக் கொடுத்தல் முக்கியம். மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். வரவை சேமிக்கப் பழகுங்கள். யாருக்கும் வாக்குறுதிகள் எதுவும் தரவேண்டாம்.
செய்யும் தொழிலில் வளர்ச்சி நிச்சயம் வரும். அதற்கு உங்கள் முயற்சியே காரணமாக அமையும். கடன் அட்டைகளை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள்.
அரசியலில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக மாற்றமும் ஏற்றமும் வரும். அதற்கு உங்களின் இப்போதைய செயல்பாடே காரணமாக அமையும். அரசுப்பணி புரிவோர்க்கு நிதானம் முக்கியம்.
கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். உங்கள் செயலில் தெளிவு இருந்தால், ஊரே பாராட்டும் நிலை வரும்.
மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்குங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். அஜீரணம், தொற்றுக் காய்ச்சல், காயம்படுதல் ஏற்படலாம். இஷ்ட அம்மன் வழிபாடு இனிமை சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் : பூசம்!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)
எங்கு பார்த்தாலும் லஞ்சம்! – டெல்லி கிரிக்கெட் சங்கம் இப்படியா?
பாலாவின் ‘வணங்கான்’ ரிலீஸ் எப்போது?
கீர்த்தி சுரேஷ் கல்யாணம் கட்டும் ஆண்டனி தாட்டில் யார்?
டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்.. பூந்தமல்லி யார்டில் சோதனை ஓட்டம்!
அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு… உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!