-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குரோதி வருட கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: 16.11.2024 முதல் 15. 12.2024 வரை
அவிட்டம்
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் காலகட்டம். அதைத் தலைகனமாக மாற்றிக் கொள்ளாதவரை உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். அலுவலகத்தில் அனுகூலமான சூழல் உருவாகும். தகுதிக்கு உரிய பெருமைகள் நிச்சயம் வந்து சேரும்.
தற்பெருமை தவிர்த்து செயல்படுவது நல்லது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு தடைபடலாம். அது நன்மைக்கே என்பதை உணர்வது நல்லது. உழைப்பில் சோம்பல் ஒருபோதும் கூடாது.
வீட்டில் நிம்மதி நிலவத் தொடங்கும். குழந்தைகள் உடல்நலம் சீராகி மகிழ்ச்சி தரும். பழைய கடன்களை நேரடியாகப் பைசல் செய்யுங்கள். ஆடை, ஆபரணம் சேரும்.
சகோதர உறவுகளிடம் வீண் சண்டை வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பெண்களுக்கு நாவடக்கம் இருந்தால், நன்மைகள் அதிகரிக்கும்.
செய்யும் வர்த்தகத்தில் செழிப்பான சூழல் உருவாகும். ஏற்றுமதி, இறக்குமதியில் நேரடி கவனம் முக்கியம். அரசியலில் இருப்போர் அகலக்கால் வைக்கவேண்டாம். முகஸ்துதி நபர்களை விலக்குங்கள்.
அரசுப்பணி செய்வோர், பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள். ஏற்றங்கள் தாமதமானாலும் நிச்சயம் வரும். கலைஞர்கள், சினிமாத் துறையினர் முயற்சிகளில் தளராமல் இருப்பது முக்கியம். வீண் ஜம்பம் ஒருபோதும் வேண்டாம்.
மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் படிப்பது நல்லது, தலைவலி, ரத்த அழுத்த மாற்றம், எலும்புத் தேய்மானம், தோள்பட்டை, மூட்டு வலி வரலாம். பெருமாள், தாயார் வழிபாடு பெருமைகள் சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் : திருவாதிரை!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் : ரோகிணி!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 – 15. 12.2024) : கிருத்திகை!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 -15. 12.2024): பரணி!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (16.11.2024 முதல் 15. 12.2024 வரை)
”அதிமுக கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள்” : திண்டுக்கல் சீனிவாசன் பளீர்!
தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி… வானிலை மையம் எச்சரிக்கை!
காட்டு யானைகளுக்கும் நாட்டு யானைகளுக்கும் கடும் மன அழுத்தம்… கர்ப்பமடைய முடியாத சோகம்!
அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் : அமெரிக்காவிற்கு புதின் எச்சரிக்கை!