உயர்வுகள் வரத்தொடங்கும் காலகட்டம்.
பணியிடத்தில் பணிவே உங்கள் பதவி உயர்வுக்குக் காரணமாகும். மேலதிகாரிகளிடம் பேசும்போது வீண் ரோஷம் தவிருங்கள்.
குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். அதை நிலைக்க வைக்க குத்தல், குதர்க்கம் தவிருங்கள். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். வரவை சேமிக்கப் பழகுங்கள்.
செய்யும் தொழிலில் நேரடி கவனமும் நேர்மையும் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்ட நடைமுறைகளை துளியும் மீறவேண்டாம்.
அரசு, அரசியலில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்படும். சக தோழர்களிடம் சர்ச்சை வேண்டாம்.
கலை, படைப்பாளிகள் முயற்சிகளுக்கு ஏற்ப பலன் பெறுவீர்கள்.
எதிர்பாலரிடம் எச்சரிக்கை முக்கியம்.
இரவுப் பயணத்தில் சஞ்சலத்தை உதறுங்கள்.
எலும்பு, மூட்டுகள், பற்கள் உபாதை வரலாம்.
சிவன், பார்வதி வழிபாடு சிறப்பு சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…