தை மாத நட்சத்திர பலன்கள்: உத்திராடம்

Published On:

| By Selvam


எண்ணங்கள் ஈடேறத் தொடங்கும் காலகட்டம்.

பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். மாற்றங்களுக்கு சற்றே பொறுமை காப்பது நல்லது.

இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். குழந்தைகளால் நல்லவை நடக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வேண்டாத வாக்குறுதி தவிருங்கள்.

செலவுகளில் நிதானம் முக்கியம். செய்யும் தொழில் வளர்ச்சிப்பாதையில் செல்லும். புதிய ஒப்பந்தங்களில் நேரடி கவனம் செலுத்துங்கள்.

அரசு, அரசியலில் உள்ளோர்க்கு புகழ் கூடும். அதேசமயம் பொது இடங்களில் நிதானம் முக்கியம்.

கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும்.

நட்பில் சலனம் இருந்தால் உடனே ஒதுக்குங்கள்.

இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம்.

கீழ் முதுகுத் தண்டுவடம், கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம்.

விநாயகர் வழிபாடு விசேஷ நன்மை தரும்.

அதானியை ஆட்டம் காண வைத்த ஹிண்டன்பெர்க் எடுத்த திடீர் முடிவு… என்ன காரணம்?

ஜாமீன் கிடைத்தும் சிறையில் உறங்கிய பாபி செம்மனூர்: நீ நடத்தும் நாடகமே!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share