சீரான நன்மைகள் வரக்கூடிய காலகட்டம். அது தொடர நேரான செயல்கள் முக்கியம்.
அலுவலகத்தில் திறமைக்கு உரிய பெருமைகள் கிட்டும். மேலதிகாரிகளிடம் வீண் சர்ச்சை தவிருங்கள்.
குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வார்த்தைகளில் நிதானமாக இருங்கள். வீடு, வாகனம் வாங்க, புதுப்பிக்க யோகம் உண்டு. குடும்ப விஷயங்களை பொது இடத்தில் உரக்கப் பேசவேண்டாம். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள்.
செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சீரான வளர்ச்சிக்கு நேரான வழிமுறைகள் முக்கியம்.
அரசு, அரசியலில் உள்ளோர் ஆதரவு பெருகும். மேலிடத்தின் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள்.
கலைஞர்கள், படைப்பாளிகள் சோம்பல் தவிர்த்தால், தொடர்ச்சியாக வெல்லலாம். படைப்பு ரகசியங்களை பொது இடத்தில் பகிர வேண்டாம்.
பயணப்பாதையில் பிறர் தரும் உணவு பானம் தவிருங்கள்.
பரம்பரை நோய்கள், ரத்த அழுத்த மாற்றம், ஹார்மோன் உபாதை வரலாம்.
மாருதி வழிபாடு மங்களம் சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கத்தியில்லாமல் போராடிய ஹீரோ…. குடும்பத்தை சைஃப் அலிகான் காப்பாற்றியது எப்படி?
அதானியை ஆட்டம் காண வைத்த ஹிண்டன்பெர்க் எடுத்த திடீர் முடிவு… என்ன காரணம்?