அமைதியாக இருந்தால், ஆனந்தம் அதிகரிக்கும் காலகட்டம்.
அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். யாருடைய தனிப்பட்ட குறையையும் நீங்கள் பெரிதுபடுத்த வேண்டாம்.
குடும்பத்தில் சுமுகப் போக்கு நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளிடம் கடுமை தவிருங்கள்.
தரல், பெறலில் அலட்சியம் வேண்டாம். வரவை சேமிக்கப் பழகுங்கள். சுபகாரியங்கள் சுலபமாகக் கைகூடும்.
செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். யாருடைய கட்டாயத்திற்காகவும் தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம்.
கலை, படைப்புத் துறையினருக்கு திறமை வெளிப்படும்.
அரசு வழிப் பாராட்டு சிலருக்குக் கிட்டும்.
இரவில் வாகனத்தில் நிதானம் முக்கியம்.
விஷக் கிருமிகள், வளர்ப்புப் பிராணிகள், தொற்று உபாதைகள் வரலாம். பொது இடங்களில் கவனமாக இருங்கள்.
சனிபகவான் வழிபாடு சந்தோஷம் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…