சீரான நன்மைகள் வரத்தொடங்கும் காலகட்டம். அதேசமயம் எதிலும் முழு கவனம் முக்கியம்.
அலுவலகத்தில் அவசரம் அலட்சியம் வேண்டாம். எதிர்பார்த்த உயர்வுகள் தாமதமானாலும் வரும்.
குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்க்கையில் சுபதடைகள் நீங்கும். புதிய உறவுகளால் மகிழ்ச்சி மலரும். பணவரவு சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். உறவுகளிடையே உரசல் வேண்டாம்.
செய்யும் தொழிலில் முழு முயற்சிகள் முக்கியம். வர்த்தகக் கடன்களை முறையாகச் செலுத்துங்கள்.
அரசு, அரசியலில் உள்ளோர்க்கு சாதமான சூழல் நிலவும். சஞ்சலம், சபலம் அறவே தவிருங்கள்.
கலை, படைப்புத் துறையினர் சோம்பல் தவிர்த்தால், வாய்ப்புகள் வரும். படைப்பு சார்ந்த விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
சளித்தொல்லை, பசியின்மை, ரத்த அணுக் குறைபாடு உபாதைகள் வரலாம்.
ரங்கநாதர் வழிபாடு, வாழ்வை ரம்யமாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…